ஹோம் /நியூஸ் /நீலகிரி /

கோத்தகிரி நெடுஞ்சாலையில் வாகனத்தை தாக்கிய ஒற்றை காட்டு யானை... அச்சமடைந்த வாகன ஓட்டிகள்...

கோத்தகிரி நெடுஞ்சாலையில் வாகனத்தை தாக்கிய ஒற்றை காட்டு யானை... அச்சமடைந்த வாகன ஓட்டிகள்...

யானை

யானை

Udhagamandalam | நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் வாகனத்தை தாக்கியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Udhagamandalam (Ooty), India

  கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள்  நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சாலைகளிலும் உலாவுகின்றன.

  இந்நிலையில் கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூர் பகுதியில் ஒற்றை யானை நள்ளிரவில்  சாலையில் நீண்ட நேரமாக உலாவியது. இதனால் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதில் ஒரு சிலர் யானையை புகைப்படம் எடுக்க முற்பட்டதால் திடீரென யானை 5க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியது.

  மேலும் முந்தி சென்ற வாகனத்தின் கண்ணாடியையும் யானை சேதப்படுத்தியது. பின்பு அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர்.

  Also Read: கேரள நரபலி வழக்கு விசாரணை.. காவல்துறையின் தாமதத்தால் ஒரு உயிர் பறிபோனதா?

  வனத்துறையினர் யானைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: ஐயாசாமி, ஊட்டி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Elephant, Nilgiris