ஹோம் /நியூஸ் /நீலகிரி /

என்னா தூக்கம்..! - துயிலெழுந்த காட்டு யானையின் க்யூட் வீடியோ

என்னா தூக்கம்..! - துயிலெழுந்த காட்டு யானையின் க்யூட் வீடியோ

வைரலாகும் யானையின் வீடியோ

வைரலாகும் யானையின் வீடியோ

கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த யானை எழும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த யானை எழும் காட்சி சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

  கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக யானைகள் கூட்டமாக தேயிலைத் தோட்டங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா உருவத்தைக் கண்டு மக்கள் அச்சமடைந்தாலும் யானைகள் செய்யும் ஒரு சில செயல்கள்பார்த்துக்கொண்டே  இருக்கலாம் என தோன்றும் .

  அப்படி கூடலூர் அருகே கொளப்பள்ளி படச்சேரி சின்கோனா தேயிலை தோட்டத்தில் யானை படுத்து இருந்தது. தூங்கி எழுந்து அந்த யானை தும்பிக்கையை உயர்த்தும் வீடியோ அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  பச்சை பசேலென இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் கருமையான நிறத்துடன் யானை எழுந்து நின்று தும்பிக்கையை தூக்கி நிற்கும் காட்சி வைரலாகி, மக்கள் அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறது.

  செய்தியாளர்: அய்யாசாமி (நீலகிரி)

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Elephant, Viral Videos, Wild Animal, Wilf animal Elephant