முகப்பு /செய்தி /நீலகிரி / ஆன்லைன் குற்றங்களை கண்டறிய சிறப்பு கண்காணிப்பு மையம்.. நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் ஊட்டியில் துவக்கம்

ஆன்லைன் குற்றங்களை கண்டறிய சிறப்பு கண்காணிப்பு மையம்.. நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் ஊட்டியில் துவக்கம்

சிறப்பு கண்காணிப்பு மையம்

சிறப்பு கண்காணிப்பு மையம்

மேற்கு மண்டல காவல்துறையில் முதல் முறையாக ஆன்லைன் வதந்திகள், ஆன்லைன் குற்றங்கள் முன்னதாகவே கண்டறிந்து தடுக்கும் விதமாக  சிறப்பு கண்காணிப்பு மையம் உதகையில் திறப்பு...

  • 1-MIN READ
  • Last Updated :
  • Mettupalayam, India

மேற்கு மண்டல காவல்துறையில் முதல் முறையாக ஆன்லைன் வதந்திகள், ஆன்லைன் குற்றங்கள் முன்னதாகவே கண்டறிந்து தடுக்கும் விதமாக  சிறப்பு கண்காணிப்பு மையம் உதகையில் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமூக வலை தளங்களில் வதந்திகளை பரப்புதல், ஆன்லைன் குற்றங்கள், தடையவியல் ஆராய்ச்சி போன்றவற்றுகாக புதிய கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்திலேயே முதல் முறையாக அமைக்கபட்டுள்ள இந்த மையத்தில்  Twitter, Facebook, Whatsapp, உள்ளிட்ட பல்வேறு சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் மூலம் கலவரம், மதபிரச்சனை போன்றவைகள் ஏற்படுவதற்கு முன்பே கண்டறிந்து தடுக்கும் விதமாகவும், பல்வேறு ஆன்லைன் மோசடி வழக்குகளில் ஆதாரங்களை உடனுக்குடன் கண்டறிந்து குற்றவாளிகளை பிடிக்கும் விதமாக நவீன தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பெயரில் அமைக்கபட்டுள்ள இந்த மையத்தை இன்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் கோவை சரக டிஐஜி ஆகியோர் திறந்து வைத்து  மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சுதாகர், "காவல்துறையினருக்கான இந்த சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் ஆன்லைன் மோசடி, சமூக வலை தள குற்றங்கள் மற்றும் தடயவியல் ஆராய்ச்சி ஆகியவற்றை கையாளும் விதமாக இந்த மையம் திறக்கபட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் போலீசாருக்கு சமூக வலைதள குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் ஏற்கனவே வழங்கபட்டு இருந்தாலும் இது போன்ற மையங்கள் இல்லை என்றும் மேற்கு மண்டலத்தில் இதுவே முதல் முறையாக திறக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : சிசிடிவி இல்லாத பகுதிகளில் நோட்டமிட்டு பைக் திருட்டு - புதுச்சேரியில் சிக்கிய பலே திருடன்

மேலும் கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரளா, கர்நாடக மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளதுடன் மிகுந்த எச்சரிக்கையுடன்  சோதனை  மேற்கொண்டு வருவதாகவும் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்குவோரின் விபரங்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்து வருவோரின் விபரங்களை கட்டாயமாக அந்தந்த காவல் நிலையங்களுக்கு உரிமையாளர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும்  கூறினார்.

மேலும் ஆன்லைன் மோசடியில் மேற்கு மண்டலத்திலேயே நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலிசார் வங்கி மோசடி வழக்குகளை சிறப்பாக விசாரித்து 3 கோடி ரூபாயை பாதிக்கபட்டவர்களுக்கு திருப்பி பெற்று தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்:  அய்யாசாமி (நீலகிரி)

First published:

Tags: Ooty, Social media, TN Police