Home /News /nilgiris /

உயிருள்ள வரை ஓவியம்தான்..! - பக்கவாதத்தால் குடும்பம் கைவிட்டும் கலையை கைவிடாத ஓவியர்

உயிருள்ள வரை ஓவியம்தான்..! - பக்கவாதத்தால் குடும்பம் கைவிட்டும் கலையை கைவிடாத ஓவியர்

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

பக்கவாதம் ஏற்பட்டும் தூரிகையால் தனது ஓவியங்களை உயிரோட்டமாக வரைந்து வரும் மாற்றுத்திறனாளி குறித்த செய்தி தொகுப்பு ....

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உதகையில் குடும்பம் ஒதுக்கிய நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமான ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டும், உயிருள்ளவரை ஓவியம் வரைவதே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

    உதகை அருவங்காடு பகுதியில் வசித்து வந்த முத்துச்செல்வன் தாய் தந்தையை இழந்ததால் தனது சகோதரர் வீட்டில் இருந்து வந்துள்ளார். ஓவியம் வரைவதில் அலாதி பிரியம் கொண்ட அவர்,  பல ஓவியக் கண்காட்சிகளில் தான் வரைந்த படங்களை காட்சிப்படுத்தி ஓவியம் வரைவதையே முழு நேர பணியாக செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவரது சகோதரர் உன்னை பார்க்க இயலாது எனக் கூறி எங்காவது சென்று விடு என கூறியுள்ளார். செய்வதறியாது இருந்த முத்துச்செல்வன் தனது நண்பர்கள் உதவியை நாடி அவர்கள் மூலம்  உதகையில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் அவர், முதியோர்களை கண்டு ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்து தனக்கான நிலைமையும் இதே போல் ஆகிவிட்டதாக வேதனை அடைந்துள்ளார்.

    ALSO READ | விவசாயிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் கடன் - சென்னையில் அறிமுகமானது KCC!

    இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு நாள், தனது ஓவியம் வரையும் ஆசையை ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் தஸ்தகீர் என்பவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட அவரும், முத்துச்செல்வன் ஆசைப்படி, அவருக்கு வர்ணங்கள் மட்டும் பிரஷ்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனை பெற்று கொண்ட முத்துச்செல்வன், பக்கவாதம் ஏற்பட்ட நிலையிலும் மகிழ்ச்சியாக தினசரி 3 படங்களை வரைந்து அசத்தி வருகிறார். இது குறித்து பேசிய அவர், ஓவியங்கள் வரைவதால், தனது கவலைகளையும் மறந்து போவதாகவும், குடும்பமே ஒதுக்கினாலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து கொண்டே உயிருள்ளவரை ஓவியம் வரைவதே தனக்கான மகிழ்ச்சி என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Draw, Nilgiris

    அடுத்த செய்தி