ஹோம் /நியூஸ் /நீலகிரி /

சுருக்கு கம்பியில் சிக்கிய பெண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

சுருக்கு கம்பியில் சிக்கிய பெண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கும் வனத்துறையினர்

சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கும் வனத்துறையினர்

Gudalur | கூடலூர் அருகே சேரம்பாடி தனியார் காபி தேயிலை தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிய பெண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gudalur, India

  கூடலூர் சேரம்பாடி பகுதியில் தனியார் காபி தோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுருக்கு கம்பியில் சிக்கிய 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர்.

  மீட்கப்பட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனக்கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

  கடந்த இரண்டு நாட்களாக முதுமலை வன கால்நடை மருத்துவமனையில் சிறுத்தைக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்தது.

  சுருக்கு வயரின் காயம்,  நீரிழப்பு,  சோர்வு,  மன அழுத்தம் ஆகியவவை சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  Also see... திருப்பதி பிரம்மோற்சவம் எட்டாம் நாள் விழா.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  சிறுத்தை இறந்த சம்பவம் தொடர்பாக  காப்பித் தோட்ட உரிமையாளர் தலைமறைவான நிலையில் ஒருவரை கைது செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐய்யாசாமி, கூடலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chit, Gudalur, Leopard