Home /News /nilgiris /

உதகையில் கோவிலுக்குள் புகுந்த கரடி, ஊருக்குள் புகுந்த யானை - வனவிலங்குகளால் மக்கள் அச்சம்

உதகையில் கோவிலுக்குள் புகுந்த கரடி, ஊருக்குள் புகுந்த யானை - வனவிலங்குகளால் மக்கள் அச்சம்

சிசிடிவி காட்சியில் பதிவான கரடி

சிசிடிவி காட்சியில் பதிவான கரடி

உதகையில் காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gudalur, India
    உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் இரவில் நுழைந்த கரடி கோவிலில் உள்ள பூஜை பொருட்கள் மற்றும் கதவுகளைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. தலைகுந்தா பகுதியில் இதுபோன்று கரடி ஊருக்குள் வருவது இது முதல் முறை இல்லை. தொடர்ந்து இதே பகுதியில் கரடி மூன்றாவது முறையாக உலா வருவதால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர். உடனடியாக கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தலைகுந்தா பகுதியில் கடந்த சில நாட்களாகக் குடியிருப்பு பகுதிகளான அழகர் மலை, ஆல்காடு நகர் மட்டுமல்லாமல் கோவில்களுக்குள்ளும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

    சிசிடிவி காட்சியை பார்க்க:



    இந்நிலையில் தலைக்குத்தா பகவான் கோவிலில் இரவில் நுழைந்த கரடி கதவுகளை இழுத்துப் பார்ப்பதும் பின்பு பூஜை பொருட்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வெளியே வருவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனவே தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் வனத்துறையினர் கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல் கூடலூர் ஓவேலி பகுதியில் இரவில் ஊருக்குள் காட்டு யானை புகுந்துள்ளது. அந்த யானை பேரூராட்சி அலுவலகம், பள்ளி சமையலறை கதவுகள் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியுள்ளது. இதே பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத் தொழிலாளி பெண்மணியை யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் அந்த பகுதியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடிக்கடி இப்பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காட்டு யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

     நீலகிரி செய்தியாளர் - N. ஐய்யாசாமி.

     
    Published by:Janvi
    First published:

    Tags: Animals, Elephant, Ooty

    அடுத்த செய்தி