ஹோம் /நியூஸ் /நீலகிரி /

முதுமலை சாலையில் மரக்கிளையுடன் விளையாடி ஆட்டம் போட்ட குட்டி யானை..

முதுமலை சாலையில் மரக்கிளையுடன் விளையாடி ஆட்டம் போட்ட குட்டி யானை..

முதுமலை சாலையில் மரக்கிளையுடன் விளையாடி ஆட்டம் போட்ட குட்டி யானை

முதுமலை சாலையில் மரக்கிளையுடன் விளையாடி ஆட்டம் போட்ட குட்டி யானை

மசனகுடியில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் வனத்தில் இருந்து வெளியேறிய குட்டி யானை ஒன்று சாலையில் உலாவியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசனகுடி பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கர்நாடக கூடலூர் பகுதிகளுக்கு செல்கின்றன.

  இரவு நேர பயணங்களில் அவ்வப்போது சாலைகளில் யானைகள், காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் அதிகமாக சாலையை கடக்கும். இந்நிலையில் நேற்று இரவு மசனகுடியில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது வனத்தில் இருந்து வெளியேறிய குட்டி யானை ஒன்று சாலையில் உலாவியது.

  நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருந்தபோது வாகன முகப்பு விளக்கு ஒளியை கண்டவுடன் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் மரக்கிளையை தும்பிக்கையில் வைத்து ஆட்டம் ஆடியபடி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது.

  Read More: ராமேஸ்வரத்திலுள்ள மக்கள் அங்காடியை ஆய்வு செய்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர்

  நீண்ட நேரம் சாலையிலேயே ஆட்டம் போட்ட குட்டி யானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் சென்றன குட்டியானை வாகனங்களை வழிமறித்து ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: ஐயப்பன்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Elephant, Nilgiris