Home /News /nilgiris /

உதகையில் சிறுத்தை தாக்கி 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம மக்கள் சோகம்

உதகையில் சிறுத்தை தாக்கி 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம மக்கள் சோகம்

தேயிலை தோட்டம் - குழந்தை உயிரிழந்த மருத்துவமனை

தேயிலை தோட்டம் - குழந்தை உயிரிழந்த மருத்துவமனை

Udhagamandalam | உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தையை சிறுத்தை தாக்கியது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
    உதகை அருகே உள்ள மைனலை அறக்காடு கிராமத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன.  இந்த தேயிலை தோட்டங்களில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அரக்கோடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷாந்த் என்பவரின் நான்கு வயது மகள் சரிதா, சக குழந்தைகளுடன் தேயிலை தோட்டம் அருகே  விளையாடி கொண்டிருந்தார்.

    அப்பொழுது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை சரிதாவின் கழுத்துப் பகுதியை கவ்வியதால் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை சரிதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    தேயிலைத் தோட்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Also see... அன்னூர் நகைக்கடையில் 2 சவரன் நகை திருட்டு... சிசிடிவி காட்சிகள்



    மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர்: ஐயாசாமி, ஊட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Child, Dead, Leopard, Udhagamandalam Constituency

    அடுத்த செய்தி