முகப்பு /செய்தி /நீலகிரி / ரூ 9.30 கோடி மதிப்பில் டீசலில் இயங்கும் புதிய நீராவி மலை ரயில் எஞ்சின்.. சோதனை ஓட்டம் வெற்றி..!

ரூ 9.30 கோடி மதிப்பில் டீசலில் இயங்கும் புதிய நீராவி மலை ரயில் எஞ்சின்.. சோதனை ஓட்டம் வெற்றி..!

புதிய டீசல் மூலம் இயங்கும் நீராவி மலை ரயில் எஞ்சின்

புதிய டீசல் மூலம் இயங்கும் நீராவி மலை ரயில் எஞ்சின்

பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூபாய் 9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில்  புதிய மலை ரெயில் எஞ்சின் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டீசல் மூலம் இயங்கும் நீராவி மலை ரயில் எஞ்சின் ரூபாய் 9.30 கோடி மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலைப்பாதையில் வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் எஞ்ஜின்களும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் இயங்கும் ரயில் எஞ்ஜின்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலைரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் எஞ்ஜினை தயாரிக்கும் பணி தொடங்கியது.

மலை ரயில் எஞ்ஜினின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூபாய் 9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில்  புதிய மலை ரெயில் எஞ்சின் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி திருச்சி பொன்மனை ரயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரயில் எஞ்ஜின் ட்ரெய்லர் வாகனத்தில் ஏற்றப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

Read More : என்ன பழக்கம் இது.. சட்டென கோபமாக கத்திய கனிமொழி.. வைரலாகும் வீடியோ..!

அதன் பின்னர் இரண்டு கிரேன்கள் உதவியுடன் மலை ரயில் எஞ்சின் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள யார்டில் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள லோகோ செட் பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரெயில் எஞ்ஜின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது சோதனைக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப்பாதையில் உள்ள அடர்லி ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம் வெற்றியடைந்த பின்னர் இரண்டாவது கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைப்பாதையில் குன்னூர் வரை புதிய மலைரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிதாக தயாரிக்கப்பட்ட டீசல் மூலம் இயங்கும் நீராவி ரயில் என்ஜினில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு காலை சோதனை ஓட்ட ரயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயில் பாதையில் சோதனை ஓட்ட ரெயில் செல்லும் போது ரயில் எஞ்சினில் ஏற்படும் மாற்றங்களை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

top videos

    செய்தியாளர் : யோகேஷ்வரன்

    First published:

    Tags: Nilgiris, Ooty