ஹோம் /நியூஸ் /நீலகிரி /

காட்டுக்குள் அம்மன் கோயில்.. திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்.. உதகையில் பரபரப்பு!

காட்டுக்குள் அம்மன் கோயில்.. திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்.. உதகையில் பரபரப்பு!

உதகை காற்றாட்டு வெள்ளம்

உதகை காற்றாட்டு வெள்ளம்

Udhagamandalam | உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்று மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்று மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மாயமானவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உதகை அருகே உள்ள சீகூர் வன பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாதம் சோமாவரம் தீபம் திருவிழாவிற்காக கோவில் திறக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து  உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். கோவிலுக்கு செல்லும் வன பகுதியில் ஓடும் ஆனிக்கல் ஆற்றில் காலை குறைந்த அளவு தண்ணீர் ஓடிய நிலையில் மதியத்திற்கு மேல் மலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில் பக்தர்கள் ஒவ்வொருவராக ஆற்றை கடக்க முயன்ற போது, உதகை ஜெக்கலொரை கிராமத்தை சார்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35) மற்றும் சுசிலா(56) ஆகிய 4 பெண்கள்  வெள்ளத்தில் அடித்து சென்று மாயமாகினர்.

அதனை பார்த்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் என  அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

Also see... கோர்ட் படியேறிய பொங்கல் பரிசு வழக்கு.. முக்கியத் தகவல் சொன்ன தமிழக அரச

இரவு நேரம் என்பதாலும் ஆற்றில் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடுவதாலும் மாயமான 4 பேரின் உடல்களை தேடும் பணி காலை முதல் மீண்டும் தொடர தீயணைப்பு துறையினர் முடிவு செய்தனர். அப்பகுதியில் கோவிலுக்கு வந்த 4 பெண் பக்தர்கள் காட்டற்று வெள்ளத்தில் அடித்து சென்று மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது.

செய்தியாளர்: அய்யாசாமி, ஊட்டி

First published:

Tags: Nilgiris, Ooty, Women