Home /News /nilgiris /

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு...

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு...

கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமி

கைது செய்யப்பட்ட கிருஷ்ணசாமி

Udhagamandalam | 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த கொலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞான ரத்தினம். இவருடைய மகன் சின்ன குட்டி என்ற கிருஷ்ணசாமி (வயது 29). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி மாவு அரைப்பதற்காக கொளப்பள்ளி சுடுகாடு பக்கம் நடந்து சென்ற போது ஆட்டோவில் கடத்தி சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. 

    இது குறித்த புகாரின் பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் கிருஷ்ணசாமி மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் வழக்கு உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் நீதிபதி நாராயணன்  குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமி சிறுமியை கடத்தி சென்றதற்காக 5 ஆண்டுகளும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் என மொத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    Also see...பொன்னியின் செல்வன் நாவலை நான் படிக்க ஜெயலலிதாதான் காரணம்

    இதை தொடர்ந்து ஜாமினில் வெளியில் இருந்த கிருஷ்ணசாமி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செய்தியாளர்: ஐயாசாமி, உதகை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Nilgiris, Ooty, Pocso, Sexually harrassed

    அடுத்த செய்தி