முகப்பு /செய்தி /நீலகிரி / 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர்கள்.. உதகையில் அதிர்ச்சி!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர்கள்.. உதகையில் அதிர்ச்சி!

கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள்

கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள்

Ooty Abuse | தனியாக இருந்த சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வடமாநில இளைஞர்கள் கைது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்தள்ள தேவர்சோலை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 வட மாநில வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி கதறி அழுதுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட போது, வடமாநில இளைஞர்கள் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தேவர்சோலை பகுதியில் உள்ள எஸ்டேடில் கூலி தொழிலாளியாக உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா ஓரான்(30), பாபுலான் ஓரான்(30) ஆகியோர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ஐயாசாமி, உதகை.

First published:

Tags: Arrest, Child Abuse, Local News, Ooty