சோரம்தங்கா நாளை மறுதினம் மிசோரம் முதல்வராக பதவியேற்பு!

Mizoram Elections | மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பாஜக ஓரிடத்திலும் மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோரம்தங்கா நாளை மறுதினம் மிசோரம் முதல்வராக பதவியேற்பு!
சோரம்தங்கா
  • News18
  • Last Updated: December 13, 2018, 9:09 AM IST
  • Share this:
மிசோரம் தேர்தலில் பெரும்பான்மையை பிடித்துள்ள மிசோ தேசிய முன்னணி தலைவர் சோரம்தங்கா, நாளை மறுதினம் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிசோ தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அய்சாலில் நடைபெற்றது.

அதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக சோரம்தங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த அவர் முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.


குடும்பத்தினருடன் மிசோரோமின் சோரம்தங்கா


இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் ஆட்சியமைக்க வருமாறு சோரம்தங்கா-வுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, புதிய முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் நண்பகல் 12 மணிக்கு சோரம்தங்கா பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முதலமைச்சருடன் அமைச்சர்கள் பதவியேற்பார்களா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்த மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் பாஜக ஓரிடத்திலும் மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Also see... பாஜகவின் தோல்வி ரஜினிக்கான முட்டுக்கட்டையா, வேகடையா? 
First published: December 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்