’டெலிவரி பசங்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்க!’- ஜொமேட்டோ கோரிக்கை

ஜொமேட்டோவின் இந்தக் கோரிக்கைக்கும் மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்து வருகின்றனர். நேரிலும் தண்ணீர் கொடுத்து ஆதரவளிப்போம்.

’டெலிவரி பசங்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்க!’- ஜொமேட்டோ கோரிக்கை
ஜொமேட்டோ
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் டெலிவரி செய்யவரும் டெலிவரி பசங்களுக்கு வாடிக்கையாளர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவ வேண்டும் என ஜொமேட்டோ நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

நம்மில் பலரும் வெயிலில் வெளியில் செல்ல பயந்துதான் ஹோட்டலில் சாப்பிட விருப்பப்பட்டாலும் கூட ஆன்லைன் உணவு டெலிவரியைத் தேர்வு செய்வோம். ஆனால், நமக்காக ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்யும் ஆட்களின் நிலை குறித்து பலரும் யோசித்திருக்கமாட்டோம்.

இது அவர்கள் பணியின் ஒரு அங்கம் என நினைக்காமல் மனிதத்தன்மையுடன் டெலிவரி செய்ய வருபவர்களுக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தால் உதவியாக இருக்கும் என அனைத்து டெலிவரி நபர்களுக்காகவும் ஜொமேட்டோ ஆதரவு கோரியுள்ளது.


ஜொமேட்டோவின் இந்தக் கோரிக்கை மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்து வருகின்றனர். நேரிலும் தண்ணீர் கொடுத்து ஆதரவளிப்போம் என்று மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்.

மேலும் பார்க்க: தென்னை மரம் ஏற ’பைக்’ கண்டுபிடித்த விவசாயி- கொண்டாடும் நெட்டிசன்கள்!
First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading