Home /News /national /

நியாயமற்ற தொழில் முறைகளை கையாண்டதாக விசாரணையை எதிர்கொள்ள உள்ள Swiggy, Zomato

நியாயமற்ற தொழில் முறைகளை கையாண்டதாக விசாரணையை எதிர்கொள்ள உள்ள Swiggy, Zomato

சோமோட்டோ, ஸ்விகி

சோமோட்டோ, ஸ்விகி

Zomato, Swiggy : இந்திய காம்படீஷன் கமிஷன் ஆப் இந்தியா (CCI) சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் ஆப் இந்தியா (என்ஆர்ஏஐ) சார்பில் Zomato மற்றும் Swiggy நிறுவனங்களுக்கு எதிராக பிளாட்பார்ம் நியூட்ராலிட்டி புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணையை அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ள இருக்கின்றன.

பிரைவேட் லேபிள் மற்றும் கிளவுட் கிச்சன் ஆகிய முறைகளில் ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்கள் களமிறங்குவதால், இந்திய காம்படீஷன் கமிஷன் ஆப் இந்தியா (சிசிஐ) சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் உத்திகள் காரணமாக பிளாட்பார்ம் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும் என்ற சூழலில், அதுகுறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது.

சிசிஐ அமைப்பின் குறிப்புகள் :

சுயநலப் போக்கின் அடிப்படையில் இத்தகைய உத்திகள் கடைப்பிடிக்கப்படுவதாக சிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய விவகாரத்தில் சுயநலப் போக்கு அடிப்படையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருக்கிறது.

ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் இந்த முகாந்திரம் பொருந்துகிறது. நியூட்ரல் பிளாட்ஃபார்ம்களை போல காட்டிக் கொண்டு வர்த்தக நலன் அடிப்படையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிஐ அமைப்பின் விசாரணைப் பிரிவு சார்பில், இதுகுறித்த விசாரணை அறிக்கையை 60 நாட்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

also read : தாகத்தால் தவித்த குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ

பதில் அளிக்க மறுத்த சொமேட்டோ மற்றும் ஸ்விகி :

இந்தப் புகார்கள் தொடர்பான கேள்விகளுக்கு சொமேட்டோ நிறுவனம் பதில் அளிக்கவில்லை. ஸ்விகி நிறுவனத்தை இயக்கி வரும் பண்டல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம், இ-மெயில் மூலமாக கேள்விகளை கேட்ட போதிலும், அதுகுறித்து எந்தவித பதில் அல்லது கருத்துக்களை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

என்ஆர்ஏஐ அமைப்பின் குற்றச்சாட்டு :

வாடிக்கையாளர்களின் டேட்டா விவரங்களின் அடிப்படையில் கிளவுட் கிச்சன் அமைக்கவும், குறிப்பிட்ட சில பிராண்ட் ரெஸ்டாரண்ட்களுக்கு கூடுதல் கட்டணம் அல்லது வாடகை கமிஷன் வழங்கவும் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன என்று தேசிய ரெஸ்டாரண்ட் கமிஷன் ஆப் இந்தியா (என்ஆர்ஏஐ) அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கஸ்டமர் டிராஃபிக்கை திருப்பி விடுவதன் மூலமாகவும், பிரைவேட் லேபிள் விற்பனை மூலமாகவும் ஸ்விகி நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் பலன் அடைந்துள்ளது என்று என்ஆர்ஏஐ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

also read : பெண் குழந்தை பிறந்த உற்சாகம்.. ஹெலிகாப்டரில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் - வீடியோ!!

பேமெண்ட் மற்றும் கமிஷன் :

உணவு டெலிவரி நிறுவனங்கள் சார்பில் ரெஸ்டாரண்ட் பார்ட்னர்களுக்கு கட்டணம் தாமதமாக வழங்கப்படுகிறது என்றும், அதிக கமிஷன் பெறப்படுகிறது என்றும் புகார் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதைய போட்டி நிறைந்த சூழலில் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று சிசிஐ அமைப்பு கூறியுள்ளது. இந்தக் கருத்து என்ஆர்ஏஐ அமைப்புக்கான பின்னடைவாக கருதப்படுகிறது.

ரெஸ்டாரண்ட்களை பண்டில் அடிப்படையில் பட்டியலிடுவது, அதேபோல உணவு டெலிவரி சேவைகளை பட்டியலிடுவது ஆகியவற்றின் மூலமாக, புகாருக்கு உள்ளான நிறுவனங்கள் சார்பில் குறிப்பிடத்தக்க போட்டியை ஏற்படுத்த இயலவில்லை என்றும் சிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Business, Swiggy, Zomato

அடுத்த செய்தி