ஜூனியரின் சிரிப்பு தான் எங்களுக்கு முக்கியம்... ஜோமாட்டோ நிறுவனம் செய்த அட்டகாசமான விஷயம்

இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஜோமாட்டோ நிறுவனத்தை வாழ்த்தி வருகின்றனர்.

news18
Updated: August 7, 2019, 6:33 PM IST
ஜூனியரின் சிரிப்பு தான் எங்களுக்கு முக்கியம்... ஜோமாட்டோ நிறுவனம் செய்த அட்டகாசமான விஷயம்
ஜோமாட்டோ
news18
Updated: August 7, 2019, 6:33 PM IST
4 வயது சிறுவனுக்கு கார் பொம்மையை பரிசாக டெலிவரி செய்த ஜோமாட்டோ நிறுவனம்.

இந்தியா முழுவதும் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, ஜோமாட்டோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. உணவு டெலிவரி சேவையில் கொடிகட்டிப் பறக்கும் ஜோமாட்டோ நிறுவனம் தற்போது 4 வயது சிறுவனுக்கு கார் ஒன்றை டெலிவரி செய்து அசத்தியுள்ளது.

இர்ஷாத் தஃப்டாரி என்பவர், ‘ஜோமாட்டோ நிறுவனம் எதை ஆர்டர் செய்தாலும் அதை டெலிவர் செய்துவிடும் என்று நினைத்து என்னுடைய 4 வயது மகன் பலூன்கள், கார் போன்றவற்றை ஆர்டர் செய்துவிட்டான்’ என்று பதிவிட்டார்.
Loading...ஆனால் அடுத்த ட்வீட்டில் அவருடைய மகன் ஒரு கார் பொம்மையை வைத்து விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், ஜோமாட்டோ நிறுவனத்திடம் இருந்து எனது மகனுக்கு ஸ்பெஷல் டெலிவரி கிடைத்துள்ளது. என்னுடைய மகன் கார் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்’ என்று பதிவிட்டார். 

இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஜோமாட்டோ நிறுவனத்தை வாழ்த்தி வருகின்றனர்.
 

என் மகன், மனைவி மற்றும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உங்களுக்கு நன்றி என்று ஜோமாட்டோ நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் இந்து மதத்தைச் சாராதவரிடம் உணவைக் கொடுத்து அனுப்பியதால் அந்த ஆர்டரை ரத்து செய்தேன் என்று பதிவிட்ட வாடிக்கையாளருக்கு ’உணவுக்கு மதம் கிடையாது. உணவு என்பதே ஒரு மதம்தான்’ என்று ஜோமாட்டோ நிறுவனம் பதிலளித்தது அனைவரையும் கவர்ந்தது. தற்போது இந்த செய்தியும் எல்லோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Also watch

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...