Zomato ஊழியர் மீது புகார் அளித்த பெண் தலைமறைவு?

Zomato ஊழியர் மீது புகார் அளித்த பெண் தலைமறைவு?

Zomato

Zomato டெலிவரி பாய் காமராஜின் புகாரை அடுத்து இளம்பெண் ஹிதேஷா மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அவர் பெங்களூருவில் இருந்த வீட்டில் இருந்து கிளம்பி மகாராஷ்டிராவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

  • Share this:
ஜொமோட்டோ டெலிவரி பாய் தாக்கியதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்து பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததையடுத்து அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை கலங்கடித்து வரும் விவகாரம் என்றால் பெங்களூருவில் ஜொமோட்டோ டெலிவரி பாய் மற்றும் இளம் பெண் ஒருவருக்கு இடையிலான மோதல் விவகாரம் தான். உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் பெண்ணுக்கும், டெலிவரி பாய் காமராஜுக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக இளம் பெண்ணுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாகவும் கூறப்படும் இந்த விவகாரத்தில் இளம் பெண் ஹிதேஷா ஒரு பக்கம் காமராஜ் தன்னிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டார், டெலிவரி பாய் காமராஜ் தரப்பில் கூறுகையில் இளம் பெண் தான் தன்னை செருப்பால் அடித்தார், அந்த களேபரத்தில் அவரின் கையில் போட்டிருந்த மோதிரம் மூக்கை காயப்படுத்தி ரத்தம் வந்ததாகவும் இருவரும் இரண்டு விதமான கூற்றுக்களை முன்வைத்துள்ளனர்.

ஆரம்பத்தில் டெலிவரி பாய் காமராஜ் தன்னை தாக்கியதாக கூறியதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதனிடையே அவர் தனது தரப்பு நியாயத்தை வீடியோவாக வெளியிட அவருக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நின்றனர். Zomato நிறுவனம் அவரை பணியிடை நீக்கம் செய்த நிலையில் அப்பெண்ணின் சிகிச்சை செலவை ஏற்றிருப்பதாகவும், அதே நேரத்தில் காமராஜுக்கு தேவையான சட்டரீதியிலான செலவை ஏற்றிருப்பதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே காமராஜின் புகாரை அடுத்து இளம்பெண் ஹிதேஷா மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அவர் பெங்களூருவில் இருந்த வீட்டில் இருந்து கிளம்பி மகாராஷ்டிராவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஹிதேஷாவின் வீட்டு முகவரி சமூக வலைத்தளங்களில் கசிந்ததால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் தற்காலிகமாக பாதுகாப்பான இடத்துக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலைய ஆய்வாளார் அனில் குமார், ஹிதேஷாவின் வீட்டுக்கு சென்ற போது அது திறக்கப்படவில்லை என்றும் அவர் தரப்பில் இருந்து அவருடைய வாக்குமூலத்தை இன்று அவர் அளிப்பார் என்றும் ஹிதேஷாவின் தரப்பில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

அவர் பாதுகாப்பு கருதி தான் நகரை விட்டு வெளியே சென்றிருப்பார், அவர் தலைமறைவாகியிருப்பார் என்று தோன்றவில்லை ஒரு வேளை அவர் விசாரணைக்கு வராவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: