முகப்பு /செய்தி /இந்தியா / 225 நகரங்களில் சேவை நிறுத்தம்... ஜொமேட்டோ எடுத்த அதிர்ச்சி முடிவு..!

225 நகரங்களில் சேவை நிறுத்தம்... ஜொமேட்டோ எடுத்த அதிர்ச்சி முடிவு..!

ஜொமாட்டோ

ஜொமாட்டோ

வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ இந்திய முழுவதும் 225 நகரங்களில தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் அண்மைக் காலங்களில் மிக வேகமாக வளர்ந்தவை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள்.  தொடக்கத்தில் ஓலா, உபேர் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்தாலும், அதற்கடுத்து ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மிக வேகமாக முன்னுக்கு வந்தன.

அதிலும் கொரோனா ஊரடங்கு  காலத்தில் இந்த நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்தன. அப்படி மிக வேகமாக வளர்ந்த ஜொமேட்டோ நிறுவனம் தற்போது சறுக்கலை சந்தித்துள்ளது. ஜொமேட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் 2022 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 346 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தி்துள்ளது.

இந்த வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியா முழுவதும் சுமார் 225 சிறிய நகரங்களில் தனது சேவையை நிறுத்திக் கொள்வாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. "இது மிகவும் எதிர்பாராத மந்தநிலையாகும். இது எங்களுடைய உணவு விநியோக லாபத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. இருப்பினும் நிர்ணயம் செய்யப்பட்ட லாப இலக்கை அடைவதற்கான நல்ல நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்" என்று ஜொமேட்டோ கூறியுள்ளது.

மேலும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் வகையில் ஜொமேட்டோ நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான கோல்ட் சந்தாவை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் ஜொமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது. இது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த சில காலாண்டுகளாகவே 225 நகரங்களில் நாங்கள் செய்த முதலீடுகளும் கூட லாபத்தை நோக்கி செல்வது போல் தெரியவில்லை என்றும் அதனால் குறிப்பிட்ட 225 நகரங்களில் தங்கள் சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த நகரங்களில் சேவை நிறுத்தப்பட உள்ளன என்ற விபரத்தை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் அதுதொடர்பான தகவல்கள் அடங்கிய முழு பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஜொமேட்டோ நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து பலர் விலகினர். நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து பொறுப்பில் இருந்த சிலர் நிறுவனத்தில் இருந்து விலகியது தான் ஜொமேட்டோ நிறுவனத்தின் இந்த சறுக்கலக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜொமேட்டோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Zomato