முகப்பு /செய்தி /இந்தியா / உத்தரப்பிரதேசத்தில் பரவும் ஜிகா வைரஸ்! மத்திய சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பரவும் ஜிகா வைரஸ்! மத்திய சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

வைரஸ் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். கொசு வலையை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பை தவிர்க்கலாம்

வைரஸ் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். கொசு வலையை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பை தவிர்க்கலாம்

வைரஸ் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். கொசு வலையை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பை தவிர்க்கலாம்

  • Last Updated :

கொசுக்களால் ஏற்படும் ஜிகா வைரஸ் பாதிப்பு உத்தரப்பிரதேசத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களை பரப்பும் கொசுக்கள் ஜிகா வைரஸை பரப்புகின்றன. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. இருப்பினும 3 மாத கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு பிறக்கும் குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். இந்த வைரஸ், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கச் செய்து பக்கவாதம் போன்றவற்றையும் ஏற்படுத்திவிடும். வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் கொசு அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோயை பரப்புகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இங்கு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி ஒரெயொருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. தற்போது படிப்படியாக அதிகரித்து 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் ஆவார். பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை.

top videos

    இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் ''வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது. வைரஸ் பரவாமல் இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். கொசு வலையை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பை தவிர்க்கலாம்'' என்றனர்

    First published:

    Tags: India, Zika Virus