Home /News /national /

ஊழியர்கள் உடல் எடையை குறைத்தால் போனஸ்.. தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு

ஊழியர்கள் உடல் எடையை குறைத்தால் போனஸ்.. தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு

ஜெரோதாவின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நிதின் காமத்

ஜெரோதாவின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நிதின் காமத்

குறைவான உடல் நிறை குறியீட்டு எண்ணை கொண்டவர்களோ, அல்லது அதிகளவில் உடல் நிறை குறியீட்டு எண்ணில் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள்.

    ஆன்லைன் புரோக்கிங் நிறுவனமான (Zerodha) ஜெரோதாவின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நிதின் காமத் தனது நிறுவன ஊழியர்கள் ஆரோக்கியமாக இருப்பதை ஊக்குவிக்க புதிய சுகாதார திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெரோதா நிறுவன ஊழியர்கள் உடல் எடையைக் குறைத்தால் அவர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    இன்றைய வாழ்க்கை சூழலில் உடல் பருமன் என்பது பலருக்கும் இருக்கும் ஓர் கவலையாக உள்ளது. இதற்கு ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவது, உணவுமுறை, வாழ்க்கை முறை என பல காரணங்களை கூறலாம். இதுபோல உடல் பருமன் உள்ளவர்கள் அதனை குறைக்க பல வழிகளை முயற்சித்து வருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் உடல் எடையை குறைக்க திட்டமிட்டு, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சைக்கிளிங் செய்வது என பல திட்டங்களை கொண்டிருப்பார்கள் ஆனால், எதையும் முழுமையாக பின்பற்றாமல் அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவார்கள்.

    Also Read:  திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக்கொலை.. பணம் கொள்ளை... கும்பகோணத்தில் பரபரப்பு

    திடீரென உடற்பயிற்சி முயற்சிகளை கைவிட்டு, உணவுமுறை வழக்கத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இப்படி, எந்த திட்டத்தையும் முழுமையாக கடைபிடிக்காததால், உடல் எடையிலும் மாற்றம் இல்லாமல் இருந்து வருவர். இப்படி இருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக யாரேனும் ஒரு சிறிய முன்னெடுப்பை எடுத்தாலும், அது நல்ல பலனை தரலாம்.



    அந்தவகையில், ஜெரோதா நிறுவனம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க புதிய சுகாதார திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதன்படி, உடல்எடையை குறைப்பவர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜெரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு போனஸாக அரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    எங்களது ஊழியர்களின் சராசரி பிஎம்ஐ 25.3ஆக உள்ளது. இதனால், ஊழியர்களுக்கு அவர் ஒர் சவால் விடுத்துள்ளார். அதாவது, ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊழியர்கள் தங்களது சராசரி உடல் நிறை குறியீட்டு எண்ணை 24க்கு கீழ் கொண்டு வர முடிந்தால் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் போனஸாக மேலும் அரை மாதம் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இருப்பதிலே குறைவான உடல் நிறை குறியீட்டு எண்ணை கொண்டவர்களோ, அல்லது அதிகளவில் உடல் நிறை குறியீட்டு எண்ணில் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள். ஒரு சுகாதார நிறுவனம் இந்த முயற்சியை முன்னெடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற முயற்சியை உங்கள் நிறுவனத்திலும் முன்னெடுக்க நினைத்தால், கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உடல் நிறை குறியீட்டு எண் என்பது உடல்நிலை மற்றும் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கான சிறந்த நடைமுறை அல்ல என்பது தெரியும். ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் மற்ற பெரும்பாலான விஷயங்களுக்கு, மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது ஓர் முயற்சியை முன்னெடுப்பது மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Fitness, Weight loss, Workout

    அடுத்த செய்தி