பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவின் நீண்டகால தலைவலி!
யூசுப் அசார் 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை கடத்தினார்.

யூசுப் அசார்
- News18
- Last Updated: February 27, 2019, 2:16 PM IST
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா நேற்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்த யூசுப் அசாரின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்.
புல்வாமா உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்- இ - முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார். பாகிஸ்தானில் கராச்சியை சேர்ந்த யூசுப் மீது விமானக் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
யூசுப் அசார் 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை கடத்தினார். மசூரை விடுவித்தால்தான் விமானத்தில் இருக்கும் பயணிகளை விடுவிப்போம் என்றனர். அப்போது வேறு வழியின்றி விமானப் பயணிகளை விடுவிக்க அவரது உறவினரும் ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவருமான மசூத் அசார் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டது இந்த யூசுப் அசார்தான்.
இந்நிலையில் இந்த யூசுப் அசாரை இந்திய ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாக தேடி வந்துள்ளனர். நேற்று திடீரென பாலகோட்டில் நடந்த தாக்குதலில் யூசுப் விமானப்படையின் லேசர் குண்டுக்கு இரையாகியுள்ளார்.
Also see... பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல் என்ன நடந்தது?
புல்வாமா உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்- இ - முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார். பாகிஸ்தானில் கராச்சியை சேர்ந்த யூசுப் மீது விமானக் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
யூசுப் அசார் 1999-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 184 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு வந்த பயணிகள் விமானத்தை கடத்தினார். மசூரை விடுவித்தால்தான் விமானத்தில் இருக்கும் பயணிகளை விடுவிப்போம் என்றனர்.