முகப்பு /செய்தி /இந்தியா / ஆந்திராவில் என்.டி.ஆர் சிலையை சம்மட்டியால் அடித்து உடைக்க முயற்சி -ஆளும் கட்சிப் பிரமுகர் கைது...

ஆந்திராவில் என்.டி.ஆர் சிலையை சம்மட்டியால் அடித்து உடைக்க முயற்சி -ஆளும் கட்சிப் பிரமுகர் கைது...

NTR Statue

NTR Statue

என்.டி.ராமராவ் குடும்பத்தினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியினர் ஆகியோர் ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :

ஆந்திராவில் என்டிஆர் சிலையை உடைக்க முயற்சி செய்ததாக ஆளும் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துர்க்கியில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் சிலை உள்ளது. அந்த சிலையை நேற்று மாலை ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகன் கோட்டீஸ்வர ராவ் சம்மட்டியால் அடித்து உடைக்க முயன்றார்.

பலர் கண்முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதனை அறிந்த என்.டி.ராமராவ் குடும்பத்தினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியினர் ஆகியோர் ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

என்டி ராமராவ் சிலை உடைக்க நடைபெற்ற முயற்சியை கண்டித்து குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also read:  உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

இந்தநிலையில் என்.டி. ராமராவ் சிலையை உடைக்க முயற்சித்த கோட்டீஸ்வர ராவ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

என்டிஆர் என்று அழைக்கப்படும் நந்தமுரி தாரக ராமராவ், 1983 முதல் 1995 வரை மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.

Also read:  தீவிர மதுவிலக்கை அமல்படுத்தும் தாலிபான்கள்.. 3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றி அழித்தனர்

top videos

    இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறுகையி, 2019ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோலத் தான் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவை இனியும் தொடர்ந்தால் பொதுமக்களே இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிரான கிளர்த்தெழுவார்கள். என்.டி.ஆர் சிலை மீதான தாக்குதல் உலகம் முழுவதிலும் உள்ள ஆந்திர மக்கள் உணர்வுகளை காயப்படுத்தியிருக்கிறது என தெரிவித்தார்.

    First published:

    Tags: Andhra Pradesh, YSR Congress