ஆந்திர நகராட்சி தேர்தல்: மொத்தமாக வாரி சுருட்டிய ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் விசாகப்பட்டிணம், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்றது.

  • Share this:
ஆந்திர மாநில நகராட்சித் தேர்தல் முடிவுகளில் உள்ளாட்சித் தேர்தலைப் போலவே ஸ்வீப் செய் செய்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாய்ப்பே அளிக்காமல் ஏறக்குறைய பெரும்பாலான இடங்களை ஆந்திர நகராட்சி தேர்தல் கைப்பற்றியுள்ளது.

ஆந்திராவில் விசாகப்பட்டிணம், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதற்கும் கடந்த 5ம் தேதி தான் வேட்பாளர்கள் பட்டியலே வெளியிட்டது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் 80% அளவுக்கு முழுமையான வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை அருகில் கூட வர முடியாத வெற்றியை பதிவு செய்தது. மேலும் முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட குப்பம் தொகுதியையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அசைத்துப் பார்த்தது.

மகத்தான வெற்றியை ருசித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நகராட்சித் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் போலவே நகராட்சித் தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 12 மாநகராட்சிகளையுமே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்ற உள்ளது. 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் 67-ல் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். இதன் மூலம் இத்தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே முழுமையாக ஸ்வீப் செய்ய உள்ளது. இருப்பினும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அராஜகத்தில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த தெலுங்கு தேசம் மற்றும் பாஜக தேர்தலில் போட்டியிடாமல் வேட்பு மனுவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதே போல ஓவைசியின் AIMIM கட்சி இரு மாநில பிரிவிணைக்கு பின்னர் முதல் முறையாக இந்தத் தேர்தலில் போட்டியில் இறங்கியுள்ளது.
Published by:Arun
First published: