தெலுங்கானாவில் களமிறங்கத் தயங்கும் ஜெகன், பவன்!

தெலுங்கனாவில் விரைவில் சட்டமன்ற தேர்தலில் நடக்க உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியும், பவன் கல்யானும் தேர்தலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை

Web Desk | news18
Updated: October 19, 2018, 5:09 PM IST
தெலுங்கானாவில் களமிறங்கத் தயங்கும் ஜெகன், பவன்!
ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: October 19, 2018, 5:09 PM IST
ஆந்திராவில் ஆக்ரோஷமாக அரசியல் களமாடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணும், தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க தயங்கி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

தெலுங்கானாவில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை சட்டமன்றத்திற்கு ஆயுள்காலம் இருக்கும் நிலையில், முன்னதாக தேர்தல் நடத்த விரும்பிய முதல்வர் சந்திரசேகர ராவ், சட்டமன்றத்தை கலைத்தார்.


சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சிறிய கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறது. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தனித்து களமிறங்குகின்றன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட சில தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

பவன் கல்யான் (கோப்புப்படம்)


ஆந்திராவில் ஆக்ரோஷமாக அரசியல் செய்யும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணும் தெலங்கானா தேர்தலில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருகின்றனர்

Loading...

குறைந்தது 20 இடங்களிலாவது போட்டியிடலாம் என ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்க, தோற்றால், ஆந்திராவில் எப்படி ஓட்டுக் கேட்கப்போவது என அஞ்சி பவன் கல்யாண் பின்வாங்கியுள்ளார். இதே காரணத்துக்காக ஜெகன் மோகன் ரெட்டியும் ஒதுங்கிவிட்டார்.

சிறு மாநிலமாக இருந்தாலும் மிசோரமில், போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பது தெரிந்தும், பெயரில் உள்ள, தேசியவாதம் என்பதற்காகவே அங்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அங்குள்ள 40 தொகுதிகளில் ஐந்தில் அக்கட்சி களம் இறங்குகிறது.
First published: October 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...