முகப்பு /செய்தி /இந்தியா / ஆந்திர உள்துறை அமைச்சராக தலித் பெண் - 2024 தேர்தலை கணக்கில்வைத்து காய் நகர்த்தும் ஜெகன்

ஆந்திர உள்துறை அமைச்சராக தலித் பெண் - 2024 தேர்தலை கணக்கில்வைத்து காய் நகர்த்தும் ஜெகன்

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேச அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் உள்துறை அமைச்சராக தலித் சமூக பெண் ஒருவரை மீண்டும் நியமித்துள்ளார்.

  • Last Updated :

ஆந்திரப் பிரதேச அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் உள்துறை அமைச்சராக தலித் சமூக பெண் ஒருவரை மீண்டும் நியமித்துள்ளார். 

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். புதிய அமைச்சரவையில் 13 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்தவர்களில் 11 பேர் தற்போதைய அமைச்சரவையிலும் தொடர்கிறார்கள்.

ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 25 பேருக்கும் பதவிப் பிரமானமும் ரகசிய காப்பு பிரமானமும் ஆளுநர் பிஸ்வ பூஷண் ஹரிசந்தன் செய்துவைத்தார். ஏற்கனவே இருந்தபடி மாநிலத்திற்கு ஐந்து துணை முதலமைச்சர்கள் உள்ளனர். அதில், முன்னேறிய காப்பு வகுப்பைச் சேர்ந்த ஒருவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியலின வகுப்பு, பழங்குடி வகுப்பு, இஸ்லாமியர் ஆகிய பிரிவுகளில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து துணை முதலமைச்சர் உள்ளனர்.

மாநிலத்தின் உள்துறை அமைச்சராக தலித் பெண் ஒருவரை முதலமைச்சர் ஜெகன் மீண்டும் நியமித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்த தனேதி வனிதா, தற்போது உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

மாநிலத்தின் நிதியமைச்சராக பகுன்னா ராஜேந்திரநாத் தொடர்கிறார். ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கட்சியின் மூத்த தலைவர் தர்மன்னா பிரசாத் ராவ்வுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருவாய்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகையான ரோஜா முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். அவருக்கு சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கும் மூவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவையில் நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜெகன் தனது ஆட்சியின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தலை கணக்கு வைத்து புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டியிருந்தது. பின்னர் கோவிட் பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.

Also read... நீட் மற்றும் க்யூட்டை மியூட் செய்ய வேண்டும் - கி.வீரமணி பேச்சு

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய ஜெகன், பதவி இழக்கும் அமைச்சர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என கவலைப்பட வேண்டாம். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த நடவடிக்கை என கூறியிருந்தார்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் ஜெகனை வீழ்த்தி முன்னாள் முதலமைச்சரும் தெலங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பிரபல தெலுங்கு நடிகாரன பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் கைகோர்க்கும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளார். இதை முறியடிக்கும் விதமாக தனது புதிய அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் பிராதன வாக்குவங்கியான கம்மா சமூகத்திற்கும், பவன் கல்யானின் காப்பூ சமூகத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

top videos

    First published:

    Tags: Andhra Pradesh, Jagan mohan reddy