• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யூடியூப்பில் மாதம் 4 லட்சம் வருமானம் ஈட்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

யூடியூப்பில் மாதம் 4 லட்சம் வருமானம் ஈட்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

nitin gadkari

nitin gadkari

நிதின் கட்கரி 6 வருடங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் தொடங்கியபோதிலும் கூட கொரோனா பேரிடர் காலத்தில் தான் அவருடைய வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்றன.

  • Share this:
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவரின் சொந்த யூடியூப் சேனல் மூலம் மாதம் 4 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிவருவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் தனது அனுபவங்கள் குறித்தும் அப்போது கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தியது குறித்தும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்துள்ளார்.

புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டப்பணிகள் குறித்து நேரில் சென்று ஆராய்வதற்காக ஹரியானா மாநிலம் சென்ற மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “இந்த கொரோனா காலத்தின் நான் இரண்டு விஷயங்களை செய்தேன், ஒன்று நானே செஃப்பாக மாறி வீட்டில் சமையல் வேலைகள் செய்தேன், மற்றொன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இணையவழி கருத்தரங்குகள் நடத்தினேன்.

சர்வதேச பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் உரை நிகழ்த்த என்னை அழைத்தன. இப்படி பல கருத்தரங்குகளில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன், இதுவரை சுமார் 950 ஆன்லைன் கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறேன். அந்த வீடியோக்களை எனது யூடியூப் சேனலில் பதிவேற்றினேன். எனது வீடியோக்களுக்கு ஏராளமான பார்வையாளர்கள் கிடைத்தனர். யூடியூப் நிறுவனம் எனக்கு பணம் தந்தது. தற்போது அதிக பார்வைகள் காரணமாக மாதம் 4 லட்சம் ரூபாய் வரை எனக்கு யூடியூப் வருமானம் கிடைக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்தார்.

நிதின் கட்கரி 6 வருடங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் தொடங்கியபோதிலும் கூட கொரோனா பேரிடர் காலத்தில் தான் அவருடைய வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்றன. தற்போது அவரின் யூடியூப் சேனலுக்கு 2.06 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

மகளிர்நல அமைச்சகத்தையே கலைத்த தாலிபான்கள் – அட்ராசிட்டி ஆரம்பம்!

பத்திரிகையாளர் சந்திப்புகள், பேட்டிகள், பொதுநிகழ்ச்சிகளின் உரை என அவரின் யூடியூப் சேனலில் உரைகள் நிறைந்துள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் நிதின் கட்கரி பற்றி அறிந்து கொள்ளவேண்டியவை என்ற தலைப்பில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சுவாரஸ்ய சம்பவம் ஒன்றையும் நிதின்கட்கரி பகிர்ந்தார். “அப்போது தான் எனக்கு புதிதாக திருமணம் நடந்த சமயம், என்னுடைய மாமனார் வீடு சாலை விரிவாக்க பகுதியில் இருந்தது, என் மனைவியிடம் கூட தெரிவிக்காமல் அந்த வீட்டை இடித்துத்தள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்” என தெரிவித்தார்.

Also Read:  பிற மாநிலங்களைவிட உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு – யோகி பெருமிதம்!

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டம் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஹரியானாவில் இந்த எக்ஸ்பிரஸ்வே 160 கிமீ நீளம் கொண்டுள்ளது, இத்திட்டம் வரும் மார்ச் 2022ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: