• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உச்சத்தில் விலை... கடைக்காரரை திசை திருப்பி வெங்காய மூட்டையை திருடிய இளைஞர்கள்...!

உச்சத்தில் விலை... கடைக்காரரை திசை திருப்பி வெங்காய மூட்டையை திருடிய இளைஞர்கள்...!

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், கடையில் இருந்து வெங்காய மூட்டையை 3 இளைஞர்கள் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

    மக்களின் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததான வெங்காயத்தின் விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. மழைக்காலம் என்பதால் அழுகிப்போவதாலும், பல இடங்களில் உற்பத்தி குறைந்ததாலும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    சென்னை கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் அதிகபட்சமாக 64 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றே வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

    வெங்காயத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    சில்லரை விற்பனையாளர்கள் 10 மெட்ரிக் டன்னும், மொத்த விற்பனையாளர்கள் 50 மெட்ரிக் டன்னும் வெங்காயத்தை இருப்பு வைக்க அனுமதி உள்ளது. இதற்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் உணவு பதுக்கல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதனிடையே வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடையில் இருந்து மூன்று இளைஞர்கள் வெங்காய மூட்டையை திருடிச்செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

    பைக்கில் வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் கடைக்காரிடம் பொருள் வாங்குவது போல பேச்சுகொடுக்க, மற்றொரு இளைஞர் அங்கிருந்த வெங்காய மூட்டையை லாவகமாக திருடி, பைக்கில் வைத்து எடுத்துச் செல்கிறார்.



    இந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: