முகப்பு /செய்தி /இந்தியா / இந்த 4 ஊர் பசங்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.. பீகார் பேச்சுலர் கிராமங்களின் சோகக் கதை இதுதான்

இந்த 4 ஊர் பசங்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.. பீகார் பேச்சுலர் கிராமங்களின் சோகக் கதை இதுதான்

திருமணமாகாமல் தவிக்கும் பீகார் கிராம இளைஞர்கள்

திருமணமாகாமல் தவிக்கும் பீகார் கிராம இளைஞர்கள்

முறையான சாலை வசதி இல்லாததால் பீகார் மாநிலத்தில் உள்ள 4 கிராம இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

உரிய வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் 90ஸ் கிட்ஸ் பலர் புலம்பும் சங்கதிகள் தற்போது அதிகம் காணப்படுகிறது. இதற்கு அவர்கள் தனிப்பட்ட குடும்ப சூழல்களே பெரிதும் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஒரு பகுதிகள் உள்ள 4 கிராமங்களில் நீண்ட காலமாகவே இளைஞர்கள் திருமணம் செய்ய படாதபாடுபட்டு வருகின்றனர். காரணம் அந்த கிராமங்கள் இன்னும் சாலை வசதியை கூட பெறமால் மோசமான முறையில் பின்தங்கியுள்ளது என்ற காரணம் தான்.

எனவே, இந்த கிராமங்கள் திருமணம் ஆகாத பேச்சுலர்கள் வாழும் கிராமம் என்ற மோசமான இமேஜை பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தின் லக்கிசராய் என்ற மாவட்டத்தில் தான் பதுவா, கன்ஹாய்பூர், பிபரியா திஹ் மற்றும் பசவுனா என்ற இந்த 4 கிராமங்களும் உள்ளன. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த கிராமங்களுக்கு சாலை வசதி கூட இல்லை.

இந்த கிராமங்களில் சுமார் 11 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் விவசாயம் செய்து நல்ல முறையில் வருவாயும் ஈட்டி வருகின்றனர். மின்சார வசதி, தண்ணீர் வசதி வரை வந்த பின்னும் இங்கு சாலை வசதி மட்டும் இன்னும் வரவில்லை. எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடங்கி முதலமைச்சர் நிதீஷ் குமார் வரைக்கும் மக்கள் அவர்களது பிரச்சனையை கோரிக்கையாக முன்வைத்துள்ளனர். இருப்பினும் இதற்கு ஒரு தீர்வு வந்த பாடு இல்லை.

இதையும் படிங்க: ஒரே வீட்டில் 2 காதலிகள்... குழந்தை பெற்ற பின் திருமணம் செய்த இளைஞர்... தெலங்கானாவில் விநோதம்!

எனவே, இந்த கிராமங்களில் வசிக்கும் 30 வயதை கடந்த பல இளைஞர்கள் திருமணம் நடக்காமல் தவித்து வருகின்றனர். உரிய சாலை வசதி இல்லாத இந்த கிராமங்களுக்கு எப்படி பெண் தருவது, அவசர ஆத்திரத்திற்கு மருத்துவமனைக்கு செல்லகூட முடியாது என்று கூறி இந்த ஊர்களுக்கு யாரும் சம்பந்தம் செய்ய முன்வருவதில்லை. எப்போது தான் எங்கள் தங்களுக்கு சாலை வசதி வந்து வாழ்வில் வசந்தம் வீசுமோ என்று இந்த கிராமங்களின் இளசுகள் ஏங்கி தவிக்கின்றனர்.

First published:

Tags: Bihar, Village