• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காதலிக்க மறுத்த பள்ளிமாணவியை கொலை செய்த இளைஞர்.. உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காதலிக்க மறுத்த பள்ளிமாணவியை கொலை செய்த இளைஞர்.. உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர்  பகுதியில் கடந்த வாரம் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தலையில் காயம் அடைந்த நிலையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அதேகிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் சிறுமிக்கு கொலைக்கு நியாயம் கேட்டு கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், இந்த கொலை சம்பவத்தில் எங்களுக்கு இருந்த கிடைத்த ஒரே ஒரு தகவல் சிகப்பு கலர் டீ-சர்ட் தான். கொலை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சிகப்பு கலர் டீ சர்ட் அணிந்த நபர் ஓடினார் என கிராம மக்கள் கூறினர். இதனைக்கொண்டு இந்த வழக்கு விசாரணையை நடந்து வந்தது. செல்போன் சிக்னல்களை கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்த 300 செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப்பகுதிக்கு அருகாமையில் உள்ள 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுனில் என்ற 21 இளைஞரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது நண்பர்கள் இருவரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

    Also Read: பெங்களூரு அப்பார்ட்மெண்டில் தாய் மகள் படுகொலை.. சிசிடிவியில் பதிவான மர்மநபர் குறித்து விசாரிக்கும் காவல்துறை

    அந்த இளைஞர் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியை வழிமறித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சிறுமியின் போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அந்த சிறுமி இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அந்த இளைஞர் சிறுமியை கீழே தள்ளியுள்ளார். இதில் சிறுமியின் தலை கல்லில் அடிப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அந்த இளைஞரின் நண்பர்கள் இருவர் சிறுமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுமி உயிரிழந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். கிராமத்துக்கு திரும்பிய மூவர் எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர். இளைஞரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: