ஆந்திராவில் போலீஸ் துன்புறுத்தலால் இளைஞர் தற்கொலை?

மாதிரிப் படம்

போலீசார் தனது வாகனத்தை கொடுக்காததோடு, தவறாக நடந்து கொண்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சீனிவாசராவ் கூறியுள்ளார்.

 • Share this:
  ஆந்திராவில் பணிபுரிந்த இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், போலீசார் துன்புறுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  சித்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்த சீனிவாசராவ் என்ற இளைஞர், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார். இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை தடுத்து நிறுத்திய வெதுலபள்ளி போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு சீனிவாசராவை அனுப்பி வைத்துள்ளனர்.

  இந்நிலையில் மறுநாள் காலை பாபட்லா நகரில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இறப்பதற்கு முன் சீனிவாசராவ் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  அதில் போலீசார் தனது வாகனத்தை கொடுக்காததோடு, தவறாக நடந்து கொண்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இது ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாகவே சீனிவாசராவ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

  Also see...

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vaijayanthi S
  First published: