• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆணுறை இல்லை என்பதற்காக இளைஞர் செய்த காரியம் - விபரீத விளையாட்டால் பறிப்போன உயிர்

ஆணுறை இல்லை என்பதற்காக இளைஞர் செய்த காரியம் - விபரீத விளையாட்டால் பறிப்போன உயிர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உல்லாசமாக இருக்க விரும்பி காதலர்கள் செய்த செயலால் பறிபோன உயிர்

  • Share this:
    குஜராத்தில் காதலியுடன் தனிமையில் இருந்த இளைஞரின் விபரித செயல் அவரது உயிரையே பறித்துள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் சல்மான் மிர்சா. இவரும் இவரது காதலியும் ஜூன் மாதம் 22-ம்  தேதி  ஜூஹாபுரா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இருவருமே போதைக்கு அடிமையானவர்கள் எனக் கூறப்படுகிறது. ஹோட்டலில் தங்கியிருந்த போது இருவரும் போதை வஸ்துகளை உட்கொண்டனர்.  காதலர்கள் இருவரும் உல்லாசமாக இருக்கவே அந்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

    இருவரும் உடலுறவு வைத்துக்கொள்ள எண்ணியுள்ளனர். பாதுகாப்புக்கு ஆணுறை இல்லாததை உணர்ந்தனர். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தினால்தான் கர்ப்பம் தரிக்காமல் இருக்க முடியும் என்பதால் மதுபோதையில் காண்டம் தேடியுள்ளனர். போதையில் அந்த இளைஞர் விபரீத முடிவு எடுத்துள்ளார். அந்த இளைஞர் தனது ஆணுறுப்பில் வலுவான பிசினை தடவியதாக கூறப்படுகிறது. விந்தணு வெளியேறாமல் இருக்க இவ்வாறு செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த இளைஞருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. போதையில் ஹோட்டலை காலி செய்து திரும்பியுள்ளனர். ஆனால் வீட்டுக்கு செல்லும் வழியிலே அந்த இளைஞர் சாலையில் மயக்கம் போட்டு விழுந்துகிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற இளைஞருக்கு தெரிந்த நபர் அவரை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிசின் பயன்பாடு அவரது உடல் நிலையை மோசமடைய வைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: