மைனர் சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் ; பூங்காவில் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி!

மாதிரி படம்

அந்த இளைஞர் நம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது என சிறுமியிடம் கூறிவிட்டு அவரை பூங்காவில், பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

  • Share this:
காதல் என்ற பெயரில் சிறுவர்கள், சிறுமிகள் சில நேரங்களில் வாழ்க்கையையே தொலைத்து விடும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.

பக்குவம் இல்லாத வயதில் குடும்பத்தினரின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் மைனர் சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வக் கோளாறினால் சில நேரங்களில் தடுமாறி சென்று தங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகின்றனர். இது போல ஒரு சம்பவம் தான் ஹைதராபாத்தில் அரங்கேறியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மீது காதல்வயப்பட்டுள்ளார். திரைப்படங்களில் வருவதை போல சிறுமியை தினமும் அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்வதையே ஒரு கடமையாக செய்து வந்திருக்கிறார். தன்னுடைய செயல்களினால் அந்தப் சிறுமியை காதலிக்க வைப்பதே தன்னுடைய நோக்கமாக திரிந்த அந்த வாலிபர் தந்து பேசினாலும், ஆசை வார்த்தைகளாளும் ஒரு வழியாக அந்த சிறுமியை தனது வலையில் விழவைத்திருக்கிறார்.

இருவரும் ஒன்றாக திரைப்படங்களுக்கும் பல இடங்களுக்கும் சென்று தங்களது காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். ஹைதராபாத்தின் யூசுப்குடா பூங்காவிற்கு இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கின்றனர். ஆனால் கடந்த மே 5ம் தேதி அவ்விருவரும் அந்த பூங்காவிற்கு சென்ற போது இளைஞரின் எதிர்பாராத செயலால் சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிறுமி எதிர்பாராத நேரத்தில் பையில் வைத்திருந்த தாலியை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்டியிருக்கிறார். இதனால் சிறுமி அதிர்ச்சியடைந்திருக்கிறார். இருப்பினும் அதனை பொருட்படுத்தாது அந்த இளைஞர் நம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது என சிறுமியிடம் கூறிவிட்டு அவரை பூங்காவில், பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். நமக்கு திருமணம் ஆகிவிட்டதால் இதில் தவறு ஒன்றும் இல்லை என கூறி அச்சிறுமியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர் தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அச்சிறுமியை கூட்டிச் சென்று தங்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக கூறி அதிர வைத்திருக்கிறார். உறவினர் அந்த இளைஞரின் தாயை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். அந்த இளைஞரின் தாயார், அங்கு வந்து இருவரையும் கண்டித்ததுடன் இனிமேல் என் மகனுடன் பேசுவதை பார்த்தால் அவ்வளவு தான் என கூறி அங்கிருந்து அனுப்பியுள்ளார். அழுது கொண்டே தன்னுடைய வீட்டுக்கு வந்த சிறுமி கழுத்தில் இருந்த தாலியை மறைத்து இருந்து வந்துள்ளார்.

கடந்த மே 17ம் தேதி சிறுமி தனியாக அழுவதை கண்ட அவருடைய தாயார் என்ன நடந்தது என விசாரித்தபோது நடந்தவற்றை அச்சிறுமி கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன அவருடைய தாயார் அந்த இளைஞர் மீது பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் தன் மகளின் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Published by:Arun
First published: