காபூல் குருத்வாரா தாக்குதல்... தீவிரவாதிகளில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தகவல்

காபூல் குருத்வாரா தாக்குதல்... தீவிரவாதிகளில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று தகவல்
  • Share this:
காபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 25-ம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் கேரளாவின் காசர்கோடு மாவட்டம் திரிகாரிப்பூர் பகுதியை சேர்ந்த 29 வயதான மொஹ்சின் என தெரியவந்துள்ளது.

இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறியவர். மேலும் இவர், ஆப்கானிஸ்தான் கோரசன் மாகாணத்தை தளமாகக் கொண்ட செயல்படும் ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து பல இடங்களில் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Also see...

 


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading