• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமைச்சர் மகனை கைதுசெய்யக்கோரி நடந்த இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் தள்ளுமுள்ளு!

அமைச்சர் மகனை கைதுசெய்யக்கோரி நடந்த இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் தள்ளுமுள்ளு!

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் நான்கு விவசாயிகள் உயிரிழந்ததை கண்டித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் அடிதடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  • Share this:
    இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்களில், இளைஞர் காங்கிரசார், கையில் பதாகைகளுடன், கோஷங்கள் எழுப்பிய படி, தலைநகரின் முக்கிய வீதிகளில் நடந்து செல்கின்றனர். அப்போது, உருவ பொம்மைகளையும் அவர்கள் எரிக்கின்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த தடுப்புகளை அமைக்கின்றனர். எனினும், தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் செல்ல முயல்கின்றனர். அதில், போலீசாருக்கும் அவர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டதை அந்த காட்சிகள் விவரிக்கின்றன.

    லக்கிம்பூர் விவசாயிகள் மரணத்தில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யக்கோரி போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். லக்கிம்பூர் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், அமைச்சர் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.



    முன்னதாக, நேற்றைய தினம் லக்கிம்பூர் வழக்கை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் மிக மோசமானது என தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சரின் மகன் கைதுசெய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மற்ற கொலை வழக்குகளிலும் இதுபோன்றுதான் சம்மன் அனுப்பி குற்றவாளியை விசாரணைக்கு ஆஜராகச் சொல்வீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    அப்போது, உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, உயிரிழந்தவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயம் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்திருப்பதாகக் கூறினார். இதன் காரணமாகவே, குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களை கைதுசெய்யாமல் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும், இந்த வன்முறை சம்பவத்தின் போது எனது மகன் அங்கு இல்லை. எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: