ஹோம் /நியூஸ் /இந்தியா /

தரமற்ற சாலைகளை போட்ட அதிகாரிகள்... ஆத்திரத்தில் சாலைகளை வெறும் கைகளில் பெயர்த்து எடுத்த மக்கள்..!

தரமற்ற சாலைகளை போட்ட அதிகாரிகள்... ஆத்திரத்தில் சாலைகளை வெறும் கைகளில் பெயர்த்து எடுத்த மக்கள்..!

சாலைகளை கைகளில் பெயர்த்து எடுத்த மக்கள்

சாலைகளை கைகளில் பெயர்த்து எடுத்த மக்கள்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரமற்ற சாலைகளை போட்ட ஆத்திரத்தில் அந்த சாலைகளை மக்கள் வெறும் கைகளால் பெயர்த்தெடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள பிலிபித் மாவட்டத்தில் தரமற்ற சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சமீப காலமாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. அங்குள்ள பகவந்த்பூர் என்ற கிராமத்தில் பிரதமர் சாலை திட்டத்தின் கீழ் ரூ.3.80 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சாலைகள் வெறும் பெயரளவில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களை கடும் ஆத்திரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

  பொதுப்பணித்துறையின் ஊழல் குறித்து கிராமத்தினர் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அங்குள்ள இளைஞர்களும் பொதுமக்களும் வெறும் கைகளாலேயே சாலையை உடைத்து எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

  இந்நிலையில்,கிராமத்தினரின் எதிர்ப்பை கண்டு பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி சைலேந்திர சவுத்ரி இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் விளக்கம் கேட்டு மீண்டும் தரமான சாலையை போடுவதாக உறுதியளித்துள்ளார்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மூலம் நிறைவேற்றப்பட்ட எக்ஸ்பிரெஸ்வே நெடுஞ்சாலை தரமில்லாமல் உள்ளதாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு எழுப்பினர். பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கிவைத்த சில நாள்களிலேயே சாலைகளில் பெரும் பள்ளங்கள், குழிகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஒப்பந்ததார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி அரசு உறுதியளித்தது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Uttar pradesh, Viral Video