முகப்பு /செய்தி /இந்தியா / கேரள போலீசார் 7 முறை அபராதம் விதித்தும் அடங்கவில்லை... மாணவி மீது பைக்கை மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது!

கேரள போலீசார் 7 முறை அபராதம் விதித்தும் அடங்கவில்லை... மாணவி மீது பைக்கை மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது!

மாணவி மீது பைக்கை மோதிய இளைஞர்

மாணவி மீது பைக்கை மோதிய இளைஞர்

Kerala Bike Accident : கேரளாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு கல்லூரி மாணவியை இடித்து தள்ளிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் நௌஃபால் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இவர் மீது கேரள போக்குவரத்து துறை சார்பில் கடந்த ஒரு வருடத்தில் 7 முறை அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் ரூ.20 ஆயிரம் அபராதம் கட்டி வைத்து இவரது பைக் வெஞ்ஞாறு மூடு  காவல் நிலையத்திலிருந்து இவர் கையில் ஒப்படைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், பைக் கிடைத்த 2 நாட்களில் கடந்த வியாழக்கிழமை கல்லூரி மாணவிகள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் முன்பு கெத்து காட்டுவதற்காக திடீரென பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காயமடைந்த மாணவி மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. வெளியான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கேரளா போக்குவரத்து துறை நௌஃபாலை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாகவும் கேரளா போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Kerala