• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஃபேஸ்புக் மூலம் பழக்கம்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

ஃபேஸ்புக் மூலம் பழக்கம்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    ஹரியானா மாநிலம் குருக்கிராம் பகுதியைச் சேர்ந்த இளம் ஹெச்.ஆராக பணியாற்றிவருகிறார். அவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் சாகர் சிங் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஃபேஸ்புக் மூலம் பேசிப் பழகியுள்ளனர். அதன்பின்னர், இருவரும் ஃபோன் நம்பரைப் பகிர்ந்துகொண்டு பேசத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் பேசிப் பழகிய சாகர்சிங், தன்னை டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகன் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.

    மேலும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். இருவரும் ஒருநாளில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹோட்டலில் ஒன்றாக அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, தன் பெயரிலுள்ள 2 கோடி ரூபாய் செக்கை வங்கியில் போட்டு பணம் எடுப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் தேவை எனக் கூறிய அந்தப் பெண்ணை ஒரு லட்ச ரூபாய் கொண்டு வரச் சொல்லியுள்ளான் சாகர் சிங். ஹோட்டல் அறையில் சந்தித்துபோது, அந்த ஒரு லட்ச ரூபாயையும் வாங்கிக் கொண்டு அந்த இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    அதன்பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்துள்ளதாக கூறி மிரட்டி பெண்ணிடம் தொடர்ந்து பணத்தைப் பறித்துள்ளான் சாகர் சிங். கடந்த ஐந்து மாதத்தில் 6.5 லட்ச ரூபாய்வரையிலான பணத்தை மிரட்டி வாங்கியுள்ளான் சாகர் சிங். சாகர் சிங் தொடர்ச்சியாக பணத்தைக் கேட்ட நிலையில் ஹரியானா மாநிலம் குருக்கிராம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். குருக்கிராம் காவல்நிலையத்திலிருந்து அந்தப் புகார் நொய்டா காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அந்தப் புகாரை விசாரித்த நொய்டா காவல்துறையினர் சாகர் சிங்கைக் கைது செய்தனர். சாகர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376, 386, 420, 506, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: