கடந்த ஆண்டு மார்ச்சில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டதில் இருந்தே நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்திருக்கின்றன. ஐடி துறை போன்ற அலுவலகத்தில் வந்து பணிபுரிய தேவையில்லாத லட்சக்கணக்கானவர்கள் இன்னமும் வீட்டில் இருந்தே தான் தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கொரோனா தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது, அதே நேரத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை, தடுப்பூசியின் மகத்துவத்தை நமக்கு உணர்த்திச் சென்றுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசி மீதான அச்சம் விலகி, தற்போது பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள். ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுவிட்டால் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் பணியாளர்கள் அலுவலகங்களில் வந்தே பணிகளை மேற்கொள்ள முடியும் என நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
ஆனால் ஊழியர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஒருவர் இருந்துவிட்டால் கூட அது பிரச்னையை ஏற்படுத்திவிடக்கூடும்.
Also Read: உலக கோப்பையையே தவறவிட்டதை போல உணர்ந்தேன் - டிம் சவுத்தியை கலங்க வைத்த இந்திய வீரர்!
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது என்பது முற்றிலும் தன்னார்வ அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும், யாரும் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்பதே அடிப்படை உரிமை என சட்ட நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த Khaitan & Co நிறுவனத்தின் பங்குதாரரான அன்ஷூல் பிரகாஷ், எக்கனாமிக் டைம்ஸ்-க்கு அளித்துள்ள பேட்டியில், நிறுவனங்களிடமிருந்து தகவல்தொடர்பு தொனி தெளிவாக உள்ளது என்றும் “தடுப்பூசி எடுக்காதவர்கள் தொழில் முன்னேற்றம் அல்லது சம்பள உயர்வை பெறமுடியாமல் போதல், போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அன்ஷுல் கூறினார்.
நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால், உங்கள் இன்கிரிமெண்ட்களை இழப்பீர்கள் என்று நான் எனது ஊழியர்களிடம் கூறியுள்ளேன் என தொழில்நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி தெரிவித்ததாக எக்கனாமிக் டைம்ஸில் செய்தி வெளியாகி உள்ளது.
இதே போல சில நிறுவனங்கள் சம்பளப் பிடித்தத்திலும் ஈடுபட்டிருப்பதாகவும், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் தான் அந்த ஊதியத்தை அவர்களுக்கு திருப்பியளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சட்டப்படி தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் இல்லை என்றாலும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை விரும்புகின்றன. இதற்காக சம்பள உயர்வு, சம்பள பிடித்தம், போனஸ் போன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் கைவைக்கத் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சில நிறுவனங்கள் கெடு விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதில் ஊழியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மிக முக்கியம் என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருப்பதால் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona Vaccine, COVID-19 Second Wave, Covid-19 vaccine