காரில் ஏசியை போட்ட நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் தீ பிடித்து உயிரிழந்த சோகம்!

காரில் ஏசியை போட்ட நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் தீ பிடித்து உயிரிழந்த சோகம்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 5, 2019, 9:29 PM IST
  • Share this:
புதுச்சேரியில் காரில் ஏசியை போட்டபோது தீ விபத்து ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்தார். அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த இளைஞர், தீயில் கருகி இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். சொந்தமாக கார் வாங்கி சவாரிகளுக்கு இயக்கி வந்த இவர் தமது காரில் தீப்பிடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு கார் ஓட்டி வருபவரான முத்துக்குமாருக்கு அடுத்தமாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தமது வீட்டுக்குச் சென்ற அவர் சவாரி செல்வதற்காக காரை இயக்கி பரிசோதித்துள்ளார். காரின் கதவுகளை மூடிய பின்னர் ஸ்டார்ட் செய்து ஏ.சி.யை ஆன் செய்து பரிசோதித்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் கார் வெடித்து சிதறியதில், தீப்பற்றி எரிந்தது. தீப்பிடித்ததால் கார் கதவுகள் திறக்க முடியாமல் லாக் ஆனதால் முத்துக்குமார் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்.

கார் எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதன் பின்னரே காரில் முத்துக்குமார் சிக்கிக் கொண்டதை அக்கம் பக்கத்தினர் அறிந்து கொண்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரை உயிருடன் மீட்க முடியவில்லை. ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நீண்டநேரம் நிறுத்தி வைத்திருக்கும் கார்களில் ஏ.சி.யை இயக்கும் போது, ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம் என கார் மெக்கானிக்குகள் அறிவுரை வழங்குகின்றனர். முத்துகுமார் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆறுதல் கூறினார். அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துக்குமாரின் மரணம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Also see:
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்