Byju's Young Genius: இளம் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம்
கடந்த ஆண்டு அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பியானோ திறனை வெளிக்காட்டினார். இதன்மூலம் உலகளவில் கவனம் ஈர்த்தார் லிடியன்.

லிடியன்
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 11:05 PM IST
பெரியவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல விஷயங்களை குழந்தைகள் செய்து காண்பித்து விடுகிறார்கள். அவர்களுடைய தைரியம் பாறைகளைப் போல வலிமையாகவும், மலைகளைப் போல உயரமாகவும் இருக்கிறது. அந்த தைரியத்தை பாராட்டும் விதமாக 'பைஜூஸ் யங் ஜீனியஸ்' என்ற பிரத்யேக நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது நியூஸ் 18. இந்த குழந்தைகளின் வயது குறைவாக இருக்கலாம். ஆனால், இவர்களது திறமையும், வளர்ச்சியும் மிகப் பெரியது என்பதை இந்த நாடு தெரிந்து கொள்ளப் போகிறது.
அந்த வகையில் இசையில் இளம் வயதில் சாதனை படைத்து வரும், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்தை அறியாதவர் இருக்க மாட்டார்கள். 15 வயதாகும் லிடியன், பியானோ கலைஞராவார். அவர், கடந்த ஆண்டு அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பியானோ திறனை வெளிக்காட்டினார். இதன்மூலம் உலகளவில் கவனம் ஈர்த்தார் லிடியன்.
அந்த நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். தனது இரண்டாவது வயதில் இசையில் ஆர்வம் காட்ட தொடங்கிய லிடியன், தற்போது பியானோவில் கலக்கி வருகிறார். அவரால் 14 இசைக்கருவிகளை வாசிக்க முடியும். பல்வேறு நாடுகளில் நடைபெற்ர இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறனை உலகறிய செய்துள்ளார்.
சிறு வயதிலேயே பல நாடுகளில் விருதுகளை பெற்று சாதித்துவரும் லிடியன், வளரும் இளம் சாதனையாளர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
லிடியன் இந்திய சினிமா துறையிலும் தனது கால்பதிந்துள்ளார். மலையாளம் படமொன்றில் இசையமைத்திருக்கும் லிடியன், இந்தி படமொன்றில் நடித்தும் இருக்கிறார்.
அந்த வகையில் இசையில் இளம் வயதில் சாதனை படைத்து வரும், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்தை அறியாதவர் இருக்க மாட்டார்கள். 15 வயதாகும் லிடியன், பியானோ கலைஞராவார். அவர், கடந்த ஆண்டு அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பியானோ திறனை வெளிக்காட்டினார். இதன்மூலம் உலகளவில் கவனம் ஈர்த்தார் லிடியன்.
அந்த நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.