ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலிக்க மறுத்த மருத்துவ மாணவி..! ஆபரேசன் பிளேடால் அறுத்து கொலை செய்த காதலன்..!

காதலிக்க மறுத்த மருத்துவ மாணவி..! ஆபரேசன் பிளேடால் அறுத்து கொலை செய்த காதலன்..!

கொலை செய்த ஞானேஸ்வர்

கொலை செய்த ஞானேஸ்வர்

ஞானேஸ்வர் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்யும் பிளேடால் தபஸ்வியின் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக அறுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Krishna, India

ஆந்திராவில் காதலிக்க மறுத்த மருத்துவ மாணவியை காதலனே ஆபரேசன் கத்தியால்  கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் 21 வயதான தபஸ்வி. விஜயவாடாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். இவரது பெற்றோர் வேலை நிமித்தமாக மும்பையில் தங்கியுள்ளனர். இதனால் தபஸ்வி விஜயவாடாவில் தனது அத்தையுடன் தங்கி பல் மருத்துவம் படித்து வந்தார்.

தபஸ்விக்கு சமூக வலைதளம் மூலம் கிருஷ்ணா மாவட்டம், மணிகொண்டாவை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் ஞானேஸ்வர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் தன்னை காதலிக்கும்படி தபஸ்வியை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார் ஞானேஷ்வர். இதனால் தபஸ்விக்கும், ஞானேஸ்வருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. தொந்தரவை தாங்கிக் கொள்ள முடியாத தபஸ்வி, காதலன் ஞானேஸ்வர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் ஞானேஷ்வரை அழைத்து எச்சரித்து அனுப்பி விட்டனர்.

Read More : கல்லூரி விடுதியில் கேரள மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பொள்ளாச்சியில் அதிர்ச்சி சம்பவம்

காதலனுடன் ஏற்பட்ட தகராறு குறித்து குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழியிடம் கூறியுள்ளார் தபஸ்வி. இதனால் தபஸ்வியையும், ஞானேஸ்வரையும் சேர்த்து வைக்க அவரது தோழி முயற்சி செய்து இருவரையும் தனது வீட்டிற்கு வரவழைத்தார். தபஸ்வியும், ஞானேஸ்வரும் பேசிக் கொண்டு இருந்தபோது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

உன்னை காதலிக்க மாட்டேன், வேறொருவரை தான் திருமணம் செய்வேன் என தபஸ்வி கூறினார்.இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஞானேஸ்வர், ஏற்கனவே திட்டமிட்டபடி கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்யும் பிளேடால் தபஸ்வியின் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக அறுத்துள்ளார்.

தோழி தடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. மேலும் தானும் பிளேடால் கைகளில் அறுத்துக் கொண்டார் ஞானேஷ்வர். வீட்டிற்குள் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தபஸ்வியை மீட்டு குண்டூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தபஸ்வி பரிதாபமாக இறந்தார். கையை அறுத்துக்கொண்ட ஞானேஸ்வரை பொதுமக்கள் அடித்து உதைத்து கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தக்கெல்லபாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பல் மருத்துவ மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Death, Students