குடும்ப பிரச்னை, சொத்து தகராறு... இளைஞரை வெறித்தனமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

ஒடிசாவில் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன்பகையால் இளைஞர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல் அவர் மீது சிறுநீர் கழித்துச் சென்றுள்ளது.

குடும்ப பிரச்னை, சொத்து தகராறு... இளைஞரை வெறித்தனமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்
கோப்புப் படம்
  • Share this:
ஒடிஷா மாநிலம் பத்ரக்கில் இரு குடும்பத்தினருக்கு இடையே இருந்த சொத்து தகராறில் சம்மந்தப்பட்ட இளைஞர் ஒருவரை வெறித்தனமாக தாக்கி உள்ளனர்.

பாதிப்புக்கு ஆளான அந்த இளைஞரை 15-க்கும் மேலானோர் அடங்கிய கும்பல் சரமாரியாக தாக்கியதாகவும், மொட்டை அடித்து அவர் மீது சிறுநீர் கழித்ததுடன், சிறுநீரை குடிக்கவும் வைத்துள்ளனர். கடந்த ஜூலை 29 அன்று நடந்த இந்த அத்துமீறல் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து திங்கள் கிழமை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. பத்ரக் மாவட்ட ஆட்சியாளர் விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ரமேஷ் சந்திர சிங், சொத்துத் தகராறு காரணமாக எழுந்த முன்விரோதம் காரணமாக இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஆண்டு சிறை சென்று திரும்பியவர் என்றும் கூறினார்.


பாதிக்கப்பட்டவரின் மனைவி இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், “தீடிரென எங்கள் வீட்டில் நுழைந்த ஒரு கும்பல் என் கணவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தனர். அவர்களை எவ்வளவு முயன்றும் எங்களால் தடுக்க முடியவில்லை. இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading