விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம்

நடனமாடும் போது உயிரிழந்த இளைஞர்

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்தார்.

 • Share this:
  ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் சிலை வைப்பது, ஊர்வலம் செல்லவும் சில மாநிலங்களில் தடை இருந்தது. ஆலயங்களில் விநாயகருக்கான பூஜைகள் நடந்தது. ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Also Read:  மோடி ஆட்சியில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை - ராகுல்காந்தி விமர்சனம்

  ஆந்திரா மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள குத்தி நகரில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில், பூஜைகள் செய்தனர். கோவில் அருகே உள்ள மண்டபத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாடல்களை ஒலிக்கவிட்டனர்.

  சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு இளைஞர்கள் சிலர் நடனமாடிக்கொண்டிருந்தனர். அதனை அப்பகுதி மக்கள் ரசித்துக்கொண்டிருந்தனர். சிலர் இளைஞர்கள் நடனமாடுவதை வீடியோவாக பதிவு செய்தனர். அப்போது 24 வயதான குல்லப்பா என்ற இளைஞர் நடனமாடிக்கொண்டிருந்தார். சக இளைஞர் ஒருவர் அவருடன் நடனமாட சென்ற போது தீடிரென்று அவர் மயங்கி விழுந்தார்.

     அந்த இளைஞரை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.இதனைக்கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இளைஞர் மரணமடைந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: