ஹோம் /நியூஸ் /இந்தியா /

மலப்புறத்தில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு...

மலப்புறத்தில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு...

காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்த இளம் பெண்

காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்த இளம் பெண்

மலப்புறத்தில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு. விபத்து ஏற்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி கர வீடியோ வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சார்ந்த ஸ்ரீதரன் என்பவர் தனது குடும்பத்தாருடன் நேற்றைய தினம் மலப்புறத்தில் உள்ள தங்களது விருந்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் விருந்தினருடன் அருகில் உள்ள கருவாரக்குன்று என்னும் பகுதியில் உள்ள ஒலிப்புழா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாறைகள் மேல் நடந்து ஆற்றில்  இறங்குவதற்காக முயலும் போது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஸ்ரீதரன் என்பவரின் மகள் 22 வயதான அக்ஷயா நீரில் மூழ்கினார்.  இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டார்.

Also see... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு  முன்பு காட்டாற்று வெள்ளம் வருவதும் , காட்டாற்று வெள்ளத்தில் குடும்பத்தார் சிக்குவதும் போன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Death, Flood, Kerala