’நாட்டை அமைதியாக இருக்க விட மாட்டீர்களா’ - அயோத்தியா விவகாரத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம்

அந்த மனுவில், ’சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தை அடுத்து அமைந்துள்ள 9 பழங்கால கோயில்களில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

’நாட்டை அமைதியாக இருக்க விட மாட்டீர்களா’ - அயோத்தியா விவகாரத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம்
அந்த மனுவில், ’சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தை அடுத்து அமைந்துள்ள 9 பழங்கால கோயில்களில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
  • News18
  • Last Updated: April 12, 2019, 9:16 PM IST
  • Share this:
நாடு இன்னமும் அமைதியாக நீடிப்பதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் பண்டிட் அமர்நாத் மிஸ்ரா என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ’சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தை அடுத்து அமைந்துள்ள 9 பழங்கால கோயில்களில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 10-ம் தேதி அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்குத் தொடர்ந்த மிஸ்ராவுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


அந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’நீங்கள், இந்த நாடு இன்னமும் அமைதியாக இருக்க அனுமதிக்க மாட்டீர்கள்’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading