ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாகிஸ்தான் தொழிற்சாலைகளை நாம் மூட வேண்டும் என்கிறீர்களா?- உச்ச நீதிமன்றம் காட்டம்

பாகிஸ்தான் தொழிற்சாலைகளை நாம் மூட வேண்டும் என்கிறீர்களா?- உச்ச நீதிமன்றம் காட்டம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான் தொழிற்சாலைகள்தான் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்துப்பள்ளிகளும் மூடப்படுவதாக டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால்ராய் கூறியுள்ள நிலையில் பாகிஸ்தான் தொழிற்சாலைகள்தான் டெல்லி காற்று மாசுக்குக் காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

காற்றுமாசு விவகாரத்தை அர்விந்த் கெஜ்ரிவால் அரசு திறம்பட செயல்படவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்திருந்தார்.

24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடு விதித்தார்.

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இன்று வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லி, என்சிஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம். காற்று மாசுக்கும் உ.பி. மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று வாதாடினார்.

Must Read: ஓமைக்ரான் இந்தியாவில் நுழைந்தது எப்படி?

உ.பி. அரசு வழக்கறிஞரின் இந்த வாதத்திற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பதிலளிக்கையில், “நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பாகிஸ்தான் தொழிற்சாலைகளுக்கு நாங்கள் தடை விதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் போலிருக்கிறதே. உங்கள் குறைகளை டேஹ் ஆணையத்திடம் தெரிவியுங்கள் அவர்கள் தீர்வு வழங்குவார்கள்” என்று பதில் அளித்தார்.

Must Read: Omicron : கேன்சல் ஆகும் டிக்கெட்டுகள்... சுற்றுலாத் துறையில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது ஒமைக்ரான்

டெல்லி, என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைக்க 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது. டெல்லி அரசும், காற்று தர மேலாண்மை அமைப்பும் எடுத்துள்ள நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டபின், டெல்லி அரசு மருத்துவமனைகள் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Air pollution, Delhi, Supreme court