முகப்பு /செய்தி /இந்தியா / 'இந்திய நதிகளின் நீரை குடிக்கும் அனைவரும் இந்துக்கள்' - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேச்சு!

'இந்திய நதிகளின் நீரை குடிக்கும் அனைவரும் இந்துக்கள்' - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேச்சு!

கேரளா முதலமைச்சர் ஆரிப் முகமது கான்

கேரளா முதலமைச்சர் ஆரிப் முகமது கான்

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் உற்பத்தியாகும் உணவை சாப்பிட்டு, இந்திய நதிகளின் நீரை குடிக்கும் அனைவரும் இந்துக்களே என ஆரிப் முகமது கான் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவின் ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகமது கான். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர் இஸ்லாமிய தனிநபர் சட்டம்,ஷா பானோ வழக்கு ஆகியவற்றில் ராஜீவ் அரசுடன் முரண்பட்டு கட்சியில் இருந்து விலகினார். பின்னர், 2004ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டில் கேரளா ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார்.இவருக்கும் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜ் சார்பில் நடைபெற்ற இந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆரிப் முகமது கான் தன்னை இந்து என அழைக்க வேண்டும் என பேசியுள்ளார். ஆரிப் கான் தனது உரையில், ஆரிய சமாஜ் உறுப்பினர்கள் மீது எனக்கு ஒரு புகார் உள்ளது. நீங்கள் ஏன் என்னை இந்து என அழைக்கவில்லை. இந்து என்பது மத அடையாளம் அல்ல, புவியியல் அடையாளமாகும்.

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் உற்பத்தியாகும் உணவை சாப்பிட்டு, இந்திய நதிகளின் நீரை குடிக்கும் அனைவரும் இந்துக்களே. அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த சார் சயித் அகமது கான் கூட இந்து என்று தான் அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே, நீங்கள் என்னை இந்து எனவே அழைக்க வேண்டும்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் தான், இந்து, இஸ்லாமியர், சீக்கியர்கள் என்ற அடிப்படையில் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டன. எனவே இப்போது இந்தியாவில் பிறந்து வாழும் அனைவரும் இந்துக்கள் தான். இந்து என்று அழைப்பது தவறு என்ற மனோபாவத்தை உருவாக்கும் விதமாக மாநிலத்தில் சதிச்செயல் நடைபெறுகிறது. இந்தியா பல துண்டாக உடைந்து போகும் என்று நினைத்தவர்களின் கணிப்பு பொய்யானதால் அவர்கள் விரக்தியில் உள்நோக்கத்துடன் இந்தியாவுக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்து பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஆரிப் முகமது கான் பேசினார்.

First published:

Tags: Hindu, Kerala