நீங்கள் ட்ரில்லியன் டாலர் நிறுவனங்களாக இருக்கலாம், பணத்தை விட மக்களின் பிரைவைசி முக்கியமானது: வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கிற்கு உச்ச நீதிமன்றம் குட்டு

உச்ச நீதிமன்றம்

கடந்த ஜனவரியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தங்கள் புதிய பிரைவசி பாலிசிக்கு பயனாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இல்லையேல் பிப்ரவரி 8ம் தேதி ஒத்துழைக்காதவர்கள் கணக்கு முடக்கப்படும் என்று கூறியிருந்தது.

 • Share this:
  புதிய பிரைவசி கொள்கைக்கு எதிரான மனு மீதான விசாரணையில் மத்திய அரசு மற்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களின் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  இந்தியப் பயனாளர்களின் சுயவிவரங்கள் அனுமதியின்றி திருடப்படும் புகார்கள் ஒரு புறம் இருக்க வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவை சமீபமாக கொண்டு வந்த பிரைவசி கொள்கை மேலும் இந்தியப் பயனாளர்களை மேலும் தரநிலையில் கீழிறக்கி சுயவிவரப்பகிர்வுகளைக் கோரியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள்.

  கர்மான்ய சிங் ஷரீன் என்பவர் 2017-ல் மேற்கொண்ட மனு ஒன்று நிலுவையில் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  உங்கள் நிறுவனம் ட்ரில்லியன் டாலர்கள் பெறுமான நிறுவனங்களாக இருக்கலாம் மக்களுக்கு அவர்களின் அந்தரங்கம் அதை விடவும் முக்கியம், மக்களின் சுயவிவரங்களை, பிரைவசியைக் காப்பது எங்கள் கடமை, அதோடு மக்கள் உங்கள் புதிய கொள்கை குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமை அமர்வு கண்டித்தது.

  இதற்கு வாட்ஸ் அப் கூறும்போது, ‘ஐரோப்பாவில் பிரைவசிக்கே தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவிலும் அதே போன்று சட்டம் இருந்தால் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். பிரைவசி குறித்த பயங்கள் தேவையற்றது, அடிப்படையற்றது, என்று தெரிவித்துள்ளது.

  இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கும் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் அனுப்பிய நோட்டீஸில் இந்த சமூக ஊடகங்களில் கேட்கும் சுயவிவரங்கள் தனக்குத் தர விருப்பமில்லை என்ற தெரிவையும் வைக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனு மீது விளக்கம் கேட்டிருந்தது. மேலும் குடிமக்களி பிரைவசி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

  இது தொடர்பாக நாடாளுமன்ற இணைக்குழு விசாரிக்கவுள்ளது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோர்ட்டுக்கு தெரிவித்தார்.

  கடந்த ஜனவரியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தங்கள் புதிய பிரைவசி பாலிசிக்கு பயனாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இல்லையேல் பிப்ரவரி 8ம் தேதி ஒத்துழைக்காதவர்கள் கணக்கு முடக்கப்படும் என்று கூறியிருந்தது.

  ஆனால் பிறகு அந்தச் செய்தியை மறுத்து அறிவிப்பு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: