குப்பைகளைக் கொடுத்து பீர் வாங்கிக் கொள்ளலாம்! கோவா அசத்தல் ஆஃபர்

கோவா மாநிலம், கடற்கரையையொட்டி இளைஞர்களைக் கவரும் வகையில் மதுக் கலாச்சாரத்துக்கு மிகவும் பிரசித்திப் பெற்றுள்ளது.

குப்பைகளைக் கொடுத்து பீர் வாங்கிக் கொள்ளலாம்! கோவா அசத்தல் ஆஃபர்
கோவா
  • News18
  • Last Updated: February 6, 2019, 1:19 PM IST
  • Share this:
கோவாவில் கடற்கரையில் கிடக்கும் சிகரெட் துண்டுகள், பாட்டில் மூடிகளைக் சேகரித்துக் கொடுத்து இலவசமாக பீர் பாட்டில்களைக் வாங்கிக் கொள்ளலாம்.

சுற்றுலாவுக்கென்றே அறியப்படும் மாநிலம் கோவா. இந்தியாவின் மற்ற சுற்றுலா பகுதிகள் பொதுவாக எழில் கொஞ்சும் இயற்கைக் நிறைந்த பகுதிகளாகவோ அல்லது ஆன்மீகப் பகுதிகளாகவோ இருக்கும்.

அதிலிருந்து மாறுபட்டு கோவா மாநிலம், கடற்கரையையொட்டி இளைஞர்களைக் கவரும் வகையில் மதுக் கலாச்சாரத்துக்கு மிகவும் பிரசித்திப் பெற்றுள்ளது.


இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால், கடற்கரைப் பகுதி அதிகமாக மாசுபடுவதாக அம்மாநில அரசு கருதியுள்ளது. எனவே, சுற்றுலாப் பகுதிகளைச் சுத்தமாகப் பராமாரிக்க திரிஸ்டி மரேன் என்ற அமைப்பும் மாநில சுற்றுலா அமைச்சகமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, 10 பீர் பாட்டில் மூடிகள் அல்லது 20 புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகளைக் கொடுத்து இலவசமாக பீர் வாங்கிக் கொள்ளலாம். ஜனவரி 30-ம் தேதி பாகா கடற்கரை பகுதியிலுள்ள சான்சிபாரில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

பீர் பாட்டில் மூடிகள் மட்டுமல்ல, பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைக் கொடுத்து கூட பீர் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் வேஸ்ட் பார்ஸ் ('waste bars) என்றழைக்கப்படும் இந்த பார்கள் நிறைய தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Also see:

First published: February 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்