முகப்பு /செய்தி /இந்தியா / ஆதார் கார்டு குறித்த எல்லா சந்தேகங்களுக்கும் எளிய தேர்வு - இந்த ஹெல்ப்லைன் நம்பரை டயல் செய்யுங்கள்!

ஆதார் கார்டு குறித்த எல்லா சந்தேகங்களுக்கும் எளிய தேர்வு - இந்த ஹெல்ப்லைன் நம்பரை டயல் செய்யுங்கள்!

ஆதார் அட்டை (மாதிரிப்படம்)

ஆதார் அட்டை (மாதிரிப்படம்)

மக்கள் 1947 என்ற ஆதார் ஹெல்ப்லைன் எண்ணை டயல் செய்து ஆதாரின் பல சேவைகளைப் பெறலாம் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன் படி அந்த ஆணையத்தால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கியுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டி இருக்கும். இந்தியாவில் இன்னும் கொரோனா அச்சம் நீடித்து வருவதால், உங்கள் வீட்டில் இருந்து கொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் வழங்கும் ஆணையம் வழங்கியுள்ளது. 

இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். வெளியான புதிய செய்தியில், மக்கள் 1947 என்ற ஆதார் ஹெல்ப்லைன் எண்ணை டயல் செய்து ஆதாரின் பல சேவைகளைப் பெறலாம் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது. "உங்கள் மொபைல் அல்லது லேண்ட்லைனில் இருந்து 1947 ஐ டயல் செய்வதன் மூலம் உங்கள் அருகிலுள்ள ஆதார் கேந்திராவை அல்லது அந்த பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களின் முகவரி போன்ற விவரங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம். அல்லது MAadhaar App ஐப் பயன்படுத்தியும் அருகிலுள்ள ஆதார் மையத்தை நீங்கள் கண்டுபிடிக்கலாம்" என்று UIDAI ட்வீட் செய்துள்ளது.

ஆதார் கேந்திராவிற்கு செல்லாமல், மக்கள் இப்போது ஆன்லைனில் தங்கள் ஆதார் விவரங்களில் மாற்றங்களை செய்யலாம். நீங்கள் இப்போது உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் மொழி (your Name, Date of Birth, Gender, Address and Language) போன்றவற்றை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆனால், குடும்பத் தலைவர் / கார்டியன் விவரங்கள் அல்லது பயோமெட்ரிக் புதுப்பிப்பு, மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பது (Head of Family/Guardian details or Biometric update, linking mobile number with Aadhaar) போன்ற பிற அப்டேட்களுக்கு, மக்கள் ஆதார் சேவா கேந்திரா அல்லது புதுப்பிப்பு மையத்தைப் பார்வையிட வேண்டும்.

மக்கள் தங்கள் ஆதார் சேவா கேந்திராவை ஆன்லைனில் கண்டுபிடிப்பதை UIDAI இப்போது எளிதாக்கியுள்ளது. ஆதார் கார்டை வைத்திருப்பவர்கள் இதற்கு மூன்று விருப்பங்களைப் பெறலாம்: மாநிலம், பின் குறியீடு மற்றும் தேடல் பெட்டி மூலம் ஈசியாக செக்கவுட் செய்து பார்க்கலாம்.

மாநில வாரியாக தேட, நீங்கள் கீழ்காணும் லிங்க்கைப் பயன்படுத்தலாம்

https://appointments.uidai.gov.in/EACenterSearch.aspx?value=1

PIN குறியீட்டின் (PIN code) மூலம் தேட, நீங்கள் கீழ்காணும் லிங்க்கைப் பயன்படுத்தலாம்

https://appointments.uidai.gov.in/EACenterSearch.aspx?value=2

தேடல் பெட்டியின் (Search Box) மூலம் தேட, நீங்கள் கீழ்காணும் லிங்க்கை பயன்படுத்தலாம்

https://appointments.uidai.gov.in/EACenterSearch.aspx?value=3&AspxAutoDetectCookieSupport=1

UIDAI ன் ஆதார் சேவா கேந்திராவில் (Aadhaar Seva Kendra) ஆன்லைனில் அப்பாயிண்ட்மெண்ட்டை ரிஜிஸ்டர் செய்ய...

இந்த UIDAI லிங்க்கை முதலில் கிளிக் செய்யவும்

https://appointments.uidai.gov.in/(X(1)S(eetddb45ihd24s55t3l3yjiq))/bookappointment.aspx?AspxAutoDetectCookieSupport=1

இப்பொது தோன்றும் திரையில் நகரம் / இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தல்

  • அப்பாயிண்ட்மெண்ட்டிற்கு புக் செய்தல் பொத்தானை கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைல் எண்ணை என்டர் செய்யவேண்டும்.
  • பின்னர் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவேண்டும்.
  • இப்போது உங்கள் மொபைலில் ஒரு OTP கிடைக்கும். பின்னர் உங்கள் ஆதார் விவரங்களுடன் OTP ஐ சமர்ப்பிக்கவும்.
  • தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை பீட் செய்யவும்.
  • உங்கள் விருப்பமான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும் பிறகு உங்களுக்கு முன்பதிவுக்கான அப்பாயிண்ட்மெண்ட் எண் கிடைக்கும் (booking appointment number)

இப்போது நீங்கள் உங்கள் ஆதார் சேவா கேந்திராவைப் பார்வையிட்டு தேவையான மாற்றங்களைச் செய்யலாம். ஆன்லைனில் சேவையை முன்பதிவு செய்வதற்கு இது உங்களுக்கு வசதியானது மட்டுமல்லாமல், இது உங்களின் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. மேலும், விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்ய ஆன்லைன் ஆதார் அப்டேட் கோரிக்கைக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும். ஏனென்றால் நீங்கள் அப்டேட் செய்வதற்கு தேவையான ஒரு முறை கடவுச் சொல் எண் (OTP) அந்த அலைபேசிக்கே வரும். 

அந்த எண் இல்லையென்றால் உங்களால் அப்டேட் செய்ய இயலாது. மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை தற்போது உள்ளது. அதேபோல் தற்போது ஆதார் தான் மனித அடிப்படை வாழ்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. அரசின் சலுகைகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது ஆகவே அனைத்தையும் அப்டேட்டாக வைத்துக்கொள்வது இப்போது அவசியமாகிறது.

First published:

Tags: Aadhaar card